என் மலர்
நீங்கள் தேடியது "விநாயகர் கோவில்"
- முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.
- விழாவையொட்டி கோவில் விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபி ஷேகவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், துர்காஹோமம்,லட்சுமி பூஜைகள் நடைபெற்று தீபாராதனையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் விமானகோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை யடுத்து அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், செயலாளர்கள் சேகர் என்ற சந்திரசேகர், சின்னராஜ் என்ற ரகுபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முள்ளக்காடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முனியத்தங்கம் நாடார், செயலாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கராஜ் நாடார், சிவாகர், முகேஷ் சண்முகவேல், ஞானவேலன், தி.மு.க. நிர்வாகிகள் பக்கிள்துரை, சில்வர்சிவா, ஒன்றிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரபாகர், செந்தில்குமார் ஜெய பாண்டியன்,அழகேசன் அருணாசல பாண்டியன், விஜய் கேபிள்பொன்ராஜ், அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சோலை குமார் உட்பட ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன்
- பிரிவு உபசார விழாவில் கலெக்டருக்கு பரிசு வழங்கினர்
திருப்பத்தூர்:
வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 2-வது மாவட்ட கலெக்டராக அமர்குஷ்வாஹா (15.06.21) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.
பின்னர் தமிழக அரசு புதிய கலெக்டராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமித்தது உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவியுடன் திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்னைக்கு சென்றார்.
கோவிலுக்கு வந்த கலெக்டரை என்விஎஸ் சங்க தலைவர் என்.பி..எஸ். ராஜா வரவேற்றார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம் அறங்காவலர் குழு உறுப்பினர் பக்தவச்சலம் வரவேற்றனர். மாய விநாயகர் கோவிலுக்கு கலெக்டர் மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவருக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பத்தூர் பொதுமக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மறக்க முடியாது என்றும் நினைவில் கொள்வேன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மாத காலம் பல்வேறு பணிகள் மாவட்ட முழுவதும் நடைபெற்று உள்ளது.
பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளோம் விடைபெறுகிறேன் மீண்டும் சமூக நலன் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும்போது தங்களை சந்திப்பேன் என தெரிவித்தார்.
அவருடன் என்.வி.எஸ் சங்க நிர்வாகிகள் ஐயப்பன் ரமேஷ் குமார் ஹரி பிரபாகர், கமலக்கண்ணன் உட்பட பல கலந்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அனைத்து துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
- கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
- வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.
பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.
இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.
நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.
- மதுரையில் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
- இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.
மதுரை
மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜநாடார்- கிருஷ்ணம்மாள் மன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியாஹவாசனம், 11 மணிக்கு தன பூஜை, மகா கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி நடந்தது. மாலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியா ஹவாசனம்,முதற்கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.
கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி நடக்கிறது. காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு கல்யாண விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர் மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்,மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 6-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது.
கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் தானீகம் ராஜா பட்டர் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.
- விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
- இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.
மதுரை
மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (9ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி நாளை(9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.
- சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
- ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இதே போல் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர்.
- அங்குள்ள விநாயகரை பொதுமக்கள் தரிசித்து சென்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி1010 நெசவாளர் காலனியில் விநாயகர் கோவில் உள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விநாயகரை வழிபட அதிகாலையில் சென்றனர்.
அப்போது விநாயகர் கோவிலில் உள்ள வேப்பமரம் மற்றும் அரசமரம் இரண்டும் ஒன்றாக உள்ள இடத்தில் அரச மரத்தில் இருந்து பால் வடிந்ததை கண்டு பொது மக்கள் ஆச்சரிய மடைந்னர்.
உடனே தகவல் சுற்று வட்டாரத்தில் பரவியது.
இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். மேலும் அங்குள்ள விநாயகரை தரிசித்து சென்றனர்.
விநாயகர் கோவிலில் உள்ள அரச மரத்தில் இருந்து பால் வடிந்தது சென்னிமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
- புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
- ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டாரில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை யொட்டி புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் எடுத்துச்செல்லப் பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதலில் கோவில் ராஜாகோபுரம் முலாலய கோபுரத்தில் விநாயகருக்கும், அடுத்து பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து மகா அபிஷேகம் செய்து தீபாராதனை, கோபூஜை நடத்தினர்.
அப்போது கோவில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6.30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் புங்கையடி விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். கோட்டார் பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் புங்கையடி விநாயகர் கோவிலில் கடந்த 3 நாட்களாக நடந்த பூஜைகள், பண்ணிசை, கலை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலாளர் முருகப்பெரு மாள், பொருளாளர் டி.ரவி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சிங்கம்புணரி அருகே செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து நேற்று 2-ம்கால பூஜைகள் நடந்தது. இன்று காலை பல்வேறு சிறப்பு பூைஜகள்,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.