என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீதிமன்றங்கள்"
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நீதி நிருவாகம் துறையின் மூலம் செயல்படுத்த உள்ள பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் அறிவிக்கின்றேன்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றக்கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 6 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் மேல் தளங்களில் சார்பு நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கூடுதலாக இரண்டு நீதிமன்ற அறைகள் மற்றும் அலுவலகங்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு உணவகம், இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டடம் மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய இரண்டு குடியிருப்புகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றக் கட்டடம், சைக்கிள் நிறுத்தம், வாகன நிறுத்தம், உணவகம், பொது கழிப்பிடம் மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய குடியிருப்பு, 8 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தருமபுரி மாவட்டம் அரூரில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #edappadipalanisamy #tnassembly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்