search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, என்ஜினீயர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள் போன்றவற்றை புதுவையில் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான வழிமுறைகள், சட்ட வழிகள் மற்றும் மாற்றுப்பொருட்களின் உற்பத்தி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர்கள் பரிசோதனை நடத்தி அத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

    ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகத்தை தடை செய்வதற்கான செயல் திட்டத்தை 15 நாட்களில் அளிப்பதாக துறை செயலாளர் பார்த்திபன் தெரிவித்தார். 
    புதுவையில் வங்கி ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு 1.11.2017 முதல் நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூக முடிவு எட்டவில்லை. 2 சதவீத உயர்வுதான் அளிக்க முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 256 வங்கி கிளைகள் மூடப்பட்டு கிடந்தது. இதில் பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் யூகோ வங்கி முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் முனுசாமி, கருணாகரன், பிரேம்ராஜ், சுந்தரவரதன், பாலகிருஷ்ணன், திருமாறன், ரவி, கதிர்வேல், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசின் பண மதிப்பிழப்பு சமயத்தில் வங்கி ஊழியர்கள் இரவு- பகல் பாராமல் பணி செய்து அரசின் பாராட்டுகளை பெற்றோம்.

    ஆனால், எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தால் புதுவையில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறினர்.

    புதுவை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான வாலிபர் முந்திரி தோப்பில் பிணமாக தொங்கினார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று சதீஷ்க்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது, இதையடுத்து மனைவியுடன் கோபித்து கொண்டு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து சதீஷ் மாயமானது குறித்து அவரது தாய் மங்கலட்சுமி கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆரோவில் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட முந்திரி தோப்பில் முந்திரி கொட்டை பொறுக்க நேற்று காலை சிறுவர்கள் சென்றனர். அப்போது ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சிறுவர்கள் இதனை தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர் இதுபற்றி ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் மாயமாகி இருந்த சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    மனைவியுடன் தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய சதீஷ் சம்பவத்தன்றே முந்திரிதோப்பில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×