search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் நகரசபை அந்தஸ்தில் உள்ள ஒரே பேரூராட்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் அமைந்துஉள்ளன.

    இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதால் பேரூராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் கன்னியாகுமரிமெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

    இந்த கடைகள் அனைத்தும் ஏலம் மற்றும் டெண்டர் மூலம் தனியாருக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுஉள்ளது. தற்போது இந்தக் கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு கடையை குத்தகைக்கு எடுத்து இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் வாடகையை நிர்ணயம் செய்வதில் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பேரூராட்சி கடைகளையும் புதிதாக தற்போதைய வாடகைநிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விடவும் தாட்கோ கடைகளுக்கு செயற்பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நிர்ணயம் செய்யும் மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் விடவும் இதர பேரூராட்சிகளின் கடைகள் அனைத்தும் உள்ளூர் வாடகைநிரக்கை ஒப்பீடு செய்து பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு வழியாக மறுமதிப்பீடு பெற்று அதன்படியான மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகை விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
    • இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற மலை கோவிலாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து முருகப்பெ ருமானை வழிபட்டு செல்கி ன்றனர். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்து கொள்ளும் கடை ஒரு வருடத்திற்கு நடத்த தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் ஏலம் நடந்தது.

    இதில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.

    இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • தொண்டியில் மீன் வரத்து அதிகரித்துள்ளது.
    • மீன்கள் ஏலம் விடப்பட்டு தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகமானது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கரை திரும்பினர். இதில் அரிய வகை மீன்களான மூட்டான், மஞ்சள் கீலி, கண்ணாடி பாறை ஆகிய மீன்கள் வலையில் சிக்கின.

    இது தவிர கொடுவா, பாறை, ஓரா, நகரை, செங்கனி, விலா மீன், தாழஞ்சுரா, திருக்கை, முரல், ஊடகம் மற்றும் ஆழ்கடலில் பிடிபடும் இறால், நண்டு, கனவாய் போன்ற மீன்களும் சிக்கியது. இவை தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இங்கிருந்து ஏலம் விடப்பட்டு, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் உள்ள அசைவப்பிரியர்களுக்கு எந்த மீன்களை வாங்கி சாப்பிடுவது என்ற நிலையில் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • 21 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏலம் மூலம் ஒப்பந்தம்
    • கடைகளை மறு ஏலம் நடத்த காலி செய்து தரும்படி நிர்வாகம் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    திற்பரப்பு மகாதேவர் கோயில் வளாகத்திற்குட் பட்ட சுற்றுலா பகுதியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட் டில் வணிக வளாகம் உள்ளது.

    21 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏலம் மூலம் ஒப்பந்தம் எடுத்து சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். 15 கடைகள் வைப்பு தொகை மற்றும் மாத வாடகையில் தனி நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ள நிர்வாகத்தினர், 6 கடைகளுக்கு நன்கொடை தொகையுடன் மாதவாடகை பெற்று உரிமம் கொடுத்துள்ளனர்.

    உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், கடைகளை மறு ஏலம் நடத்த காலி செய்து தரும்படி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் கடைக்காரர்கள் மாத வாடகை கூடுதலாக பெற்று, தங்களுக்கே தொடர் அனுமதி வழங்க கேட்டுள்ளனர். இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரி வித்தது. இதனால் நன்கொடை கொடுத்து உரிமம் பெற்றவர்கள் நீதிமன்றம் சென்றனர். நன்கொடை பெற்று உரிமம் வழங்குவது சட்டத்தை மீறிய செயல் என்பதால், மாத வாடகை நிலுவை கணக்கிட்டு, நன்கொடையில் மீதி தொகையை உரிமம் பெற்றவர்களுக்கு திருப்பி கொடுக்கவும், தற்போது கடை உரிமம் பெற்றவர்கள் மறு ஏலத்தில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில் கடைகளில் தற்போது வர்த்தகம் செய்துவரும் அனைத்து நபர்களையும் வெளியேற்றி மறு ஏலம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஒப்பந்தகாலம் கடந்து வருடங்களாக வர்த்தகம் செய்து வருவதால் மேற்கொண்டு தொடர்ந்து உரிமம் வழங்க முடியாது என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. நேற்று காலையில் குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், கோவில் ஸ்ரீகாரியம் பத்மனாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார், குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், பொறியாளர் ஐயப்பன் உட்பட நிர்வாக பணியாளர்கள் சம்பவ இடம் வந்தனர் வெளியேற்றினர்.

    அதிரடிபடை உட்பட பலத்த போலீஸ் பாது காப்புடன் கடைகளிலிருந்து வர்த்தகர்களை வெளி யேறவும், பொருட்களை வெளியேற்றி, கடையை அடைத்து சாவியை வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் முன் அறிவிப்பு இன்றி வெளியேற்றுவதற்கு கடைக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர். வாடகை பாக்கி தவிர்த்து சட்டப்படி நிர்வாகத்திலிருந்து பணம் கிடைக்க வேண்டிய கடைக்கா ரர்களுக்கு உடனடியாக காசோலை வழங்கப்படும். நிர்வாகத்திற்கு தரவேண்டிய நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படும். ஆனால் எவரையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் உறுதியாக கூறினர்.

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வர்த்தகர்கள் சார்பில் வந்திருந்த வக்கீல் கள், நிர்வாக நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது என்றும், மீறி வெளியேற்றும் பட்சத்தில், வெளியேற்றப்படுவதாக எழுத்து மூலமாக ஆவ ணப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் நிர்வாக வக்கீல் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எழுதி கொடுத்து, மூன்று நபர்களுக்கு உரிய தொகைக்கான காசோலை கொடுத்து பிரச்சனையை சுமூகமாக முடிவிற்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

    ஏற்காட்டில் ரூ.30 லட்சத்துக்கு 13 கடைகள் ஏலம் நடந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாவட்ட ஊராட்சி குழுவுக்கு சொந்தமாக, 13 கடைகள் உள்ளன.

    அந்த கடைகள் ஏலம், சேலம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர், மக்கள் பங்கேற்றனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த ஏலத்தை மாவட்ட ஊராட்சி குழு செயலர் சேகர் நடத்தினர். தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், அ.தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், பா.ம.க. தரப்பில் 3 கடைகளும் என முன்கூட்டியே சுமூகமாக பேசி வைத்திருந்தனர்.

    இந்த மொத்தம் 13 கடைகள் ரூ.30 லட்சத்து, 99 ஆயிரத்து, 950-க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    திருப்பூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற் றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட் டார விவசாயிகள் 30 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட் டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.100.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.88.99-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 9 ஆயிரத்து 752 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.35-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 59 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 10 சிவப்பு ரக எள் மூட்டைகள் கூடுதலாகவும், 672 தேங்காய்கள் குறைவாகவும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகள் கூடுத லாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோ கடந்த வாரம் விலையிலும், தேங்காய் 1 கிலோ கடந்த வாரத்தை விட இந்த வாரம் 60 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு 65 பைசாவும் கூடுத லாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 12 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 74 டன் அளவில் மொத்தம் ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 907-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது. இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வை யாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்ற ஏலத்தில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஜாடி 128 கோடி ரூபாய்க்கு விலை போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் பிரபல சாத்பை நிறுவனத்தின் சார்பாக பாரம்பரிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன பீங்கான் ஜாடி ஒன்று ஏலம் விடப்பட்டது. மிகவும் பழமையான இந்த ஜாடி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாடியானது 128 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.


    பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ஜாடி எதிர்பார்த்த விலையை விட 30 மடங்கு அதிக விலைக்கு போனது. பல ஆண்டுகளாக வீட்டில் குப்பை போல் வைக்கப்பட்டிருந்த ஜாடி பல கோடி ரூபாய்க்கு விலை போனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    ×