search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 521கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.10-க்கும், சராசரியாக ரூ.18.56-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.98ஆயிரத்து 326-க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 2 ஆயிரத்து 90 கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.00- க்கும், சராசரியாக ரூ.23.00-க்கும் ஏலம் நடைபெற்றது.

    மொத்தம் ரூ.50 ஆயிரத்து 98- க்கு ஏலம் நடைபெற்றது. ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19- க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வேளாண் பொருள் விற்பனைக்கான பணத்தை நேரடியாக செலுத்தினர்.

    • அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
    • மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளரின் செயல்முறை ஆணையின்படி கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்க்கு காப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரது (நகரம்) தஞ்சாவூர் அரசு சேவை இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000 ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தஞ்சாவூர் (நகரம்) பெயரிலும் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் (ஊரகம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ5,000-க்கான காப்புத்தொகையினை தஞ்சாவூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (ஊரகம்) பெயரிலும்,

    ஒரத்தநாடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000/ ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ஓரத்தநாடு) பெயரிலும், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்டத்தொழில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000 ற்கான காப்புத்தொகையினை பொது மேலாளர் மாவட்டத் தொழில் மையம் தஞ்சாவூர் பெயரிலும், எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்கான காப்புத்தொகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தஞ்சாவூர்,பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000-க்கான காப்புத் தொகையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் பெயரிலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் விலைப்புள்ளியுடன் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுலகங்க ளில் தொடர்புடைய அலு வலர்களால் திறக்கப்படும்.

    உறையின் மீதுஎந்த வாக னத்திற்கான விலைப்புள்ளி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏல அறிவிப்பு நாள் மற்றும் தேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.36 குவிண்டால் எடை கொண்ட 7,870 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.39-க்கும், சராசரி விலையாக ரூ.25.75-க்கும் என மொத்தம் ரூ.71ஆயிரத்து 113-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 219.07 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.12-க்கும், சராசரி விலையாக ரூ.81.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் என மொத்தம் ரூ.16லட்சத்து 67ஆயிரத்து 20-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    • ரூ.5.99 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது
    • ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

    கரூர்:

    ப.வேலுார் வெங்க மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 84.39 ரூபாய்க்கும், குறைந்த பட்ச மாக, 51.65 ரூபாய்க்கும், சரா சரியாக, 84.39 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 5.99 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.




    • பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • இதில் 7 ஆயிரத்து 857‌ கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • .ஏலத்தில் 50 விவசாயிகள், 9 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
    • ஏலத்துக்கு 2,350 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 907 கிலோ.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,350 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 907 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.26.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 25.45.46 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது.

    இவற்றின் எடை 1,011 கிலோ. கொப்பரை கிலோ ரூ. 57.15 முதல் ரூ. 82.45 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 79.05.ஏலத்தில் 50 விவசாயிகள், 9 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா் 

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 28.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 8,616 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.25.89-க்கும் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 904-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 107.66 1/2 குவிண்டால் எடை கொண்ட 235 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.81.36-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.71-க்கும், சராசரி விலையாக ரூ.71.16-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 41-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது. 

    • ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும்.
    • மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையத்தில் 24 கடைகள், தினசரி மார்க்கெட்டில் 52 கடைகள், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகள் ஆக மொத்தம் 78 கடைகள் மாத வாடகைக்கு விட பொது ஏலம் விடும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிலையில் ஏற்கனவே ஏலத்தில் கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகளும், புதிய வியாபாரிகளும் கலந்து கொள்ளவில்லை.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது, சிறிய கடைகளின் அடிப்படை வாடகையே, ரூ.4ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. மேலும் ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும். அடிப்படை வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட்டால் தான் கடைகளை ஏலம் எடுக்க முடியும்.

    தற்போது உள்ள வாடகைக்கு கடையை எடுத்து நடத்த முடியாது எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஏலத்தில் குறைந்தளவே வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இதில் மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நேற்று 111 விவசாயிகள் கலந்து கொண்டு 49 ஆயிரத்து 901கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு விற்பனை செய்து செல்கிறார்கள். நேற்று 111 விவசாயிகள் கலந்து கொண்டு 49 ஆயிரத்து 901கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 16 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.75க்கும், குறைந்தபட்சம் ரூ.59. 65க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 39ஆயிரத்து 958க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.63 1/2குவிண்டால் எடை கொண்ட 5 ஆயிரத்து924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.59-க்கும், சராசரி விலையாக ரூ.26.25-க்கும் என மொத்தம் ரூ.51ஆயிரத்து 441-க்கு விற்பனையானது.

    அதேபோல் 182.59 குவிண்டால் எடை கொண்ட 375-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.887.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.89-க்கும், சராசரி விலையாக ரூ.86.89-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.05-க்கும், சராசரி விலையாக ரூ.75.55-க்கும் என மொத்தம் ரூ.14லட்சத்து 69ஆயிரத்து 136-க்கு விற்பனையானது.

    அதேபோல் 3.10 குவிண்டால் எடை கொண்ட 4 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 132.69 -க்கும், குறைந்த விலையாக 110-க்கும் , சராசரி விலையாக ரூ116.19-க்கும் என ரூ39 ஆயிரத்து 185- க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-க்கு ஏலம் போனது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

    ஆனால் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும், அதனை, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாகத் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தொடக்க நிகழ்வு அங்கு நடைபெற்றது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஏலத்தைத் தொடங்கி வைத்தார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்கள் தாட்சியாயினி, முருகானந்தம், விளம்பர மற்றும் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், பாபநாசம் உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஏலத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, இலுப்பக்கோரை, கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலிருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர். இதில் திருச்சி, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியிலிருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-ம், குறைந்த பட்சமாக ரூ. 950-ம், சராசரியாக ரூ, 1100 என விலை ஏலம் தொகையாகக் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கான தொகை வழங்கப்பட்டது.

    ×