search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் ஒரு வருடத்துக்கு 31 டன் காகித தாள் சேமிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மின்னாளுமை மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும். பயனாளிகளை தேடி திட்டம் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகளை நாம் மின்னணு உருவாக்கம் செய்து இ-சேவை திட்டம் மூலமாக வழங்க இருக்கிறோம். இ-ஆபிஸ் மிகப்பெரிய பயனை தருகிறது. அனைத்து அலுவலகத்திலும் இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலை பொறுத்து பார்த்தால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் ஒரு வருடத்துக்கு 31 டன் காகித தாள் சேமிக்கப்படுகிறது. இ-ஆபிஸ் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில் நுட்பத்துறை திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, தொடர்பான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.
    • தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது.

    இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை கண்காணிக்கவும், தொண்டியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ரோட்டரி சங்கமும், ராமநாதபுரம் தனியார் நிறுவனமும் மற்ற தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் முருகேசன், பட்டயத் தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா, முன்னாள் தலைவர்கள் மரிய அருள், சிவராமகிருஷ்ணன் ரஜினி, வீரகுமார் முன்னிலை வகித்தனர். தொண்டி நகர் பகுதியில் 16 இடங்களில் 60 காமிராக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து காமிராக்களையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழி யாக வந்த பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காரை சாலை யோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இவரை பார்த்ததும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோரும் காரில் இருந்து இறங்கி வந்தனர்.

    அவர்களிடம் இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்டு உள்ளதா? எங்கெங்கு நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவர ங்களை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் தாமும் பங்கேற்ப தாக கூறினார். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கி ருந்து காரில் புறப்பட்டு சென்ற னர். சாலை யோரத்தில் நின்றபடி அரசு அலுவல ர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரை யாடியது அங்கி ருந்த கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்ட ர்களி டையே நெகிழ்ச்சி யை ஏற்படுத்து வதாக இருந்தது.

    • சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
    • நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழும 55 ஆவது பேரவை கூட்டம் தலைவர் சலிமுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தலைவர் சலிமுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பொருளாளர் சேகர் 55வது ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், நாகப்பட்டினம் பனங்குடியில் 36 ஆயிரம் கோடி ரூபாயில் சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    அந்த ஒப்பந்தத்தின் படியே விரிவாக்க பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    நாகை -தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்தாலும் பழைய சாலையை மேம்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    தொகுதியில் நீண்ட நாள் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டுள்ள தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக அரசிற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும்.

    அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்கு 115 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மேம்பால பணிகள் தொடங்க டிசம்பர் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    கடல் உணவு மண்டலம் அமைப்பதற்கான பரிந்துரை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட திட்டங்களில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது..

    மற்ற துறைகளும் மாநில அளவில் முதல் 10 இடங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசு தொடங்கியுள்ள மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை மேம்பாட்டிற்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கலெக்ட ரிடம் தலைவர் சலிமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.

    இறுதியில் இணை செயலாளர் முகமது பகுருதீன் நன்றி தெரிவித்தார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாளை விழிப்புணர்வு மையம் தொடங்குகிறது
    • தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    மதுரை,

    தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நாளை (12-ந் தேதி) மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட உள்ளது.

    மதுரை அரசு மருத்துவ மனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்றத்தை டீன் ரத்தினவேலு தொடங்கி வைக்கிறார்.

    இங்கு மருத்துவம், செவிலியர் மற்றும் மருத்து வம் சார்ந்த படிப்புக்கள் பயிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு துறையிலும் மனநல வழிகாட்டியாக ஒரு உதவி பேராசிரியரும், மனநல தூதுவராக 2 மாண வர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ மாணவர்களின் மனநல ஆலோசனைக்காக 24 மணி நேர தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட உள்ளது. இதில் துணை முதல்வர், மருத்துவக்கண்கா ணிப்பாளர், செவிலியர் கல்லுாரி முதல்வர், மனநல மருத்துவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் பங்கேற்கின்றனர்.

    • விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து 4 அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்து றையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அதிகாரி ழயகளுடனான ஆய்வு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மேலாண்மை இயக்குநர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவின்குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் , சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, டபிள்யூ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், செட்டியார்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிவகாசி மாநகராட்சி.

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள், ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகள் என அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

    உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட சாலை வசதி, குடிநீர், சுகாதாரம், நீர்த்தேக்க தொட்டிகள், பஸ் நிலையம், பேவர் பிளாக், பாதாள சாக்கடை, மயானம், குடிநீர் குழாய் சீரமைத்தல், அனைவருக்கும் வீடு, பூங்கா மேம்பாடு, கூட்டுக்குடிநீர் திட்டம், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாநகராட்சி ஆணையர்கள், மாநகர பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், மண்டல செயற்பொறியாளர்கள், நகராட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம்.
    • 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வரும் 7-ந்தேதி தொடங்கி 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமை தாங்கினார். நடைபயணத்தில் தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காஙகிரஸ் கட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாட்டை பிளவுப்படுத்தி வருகிறது. பால், அரிசி, பள்ளி குழந்தைகள் பயன்படுத்த கூடிய பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. வரியை விதித்து மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்தியாவில், ஆட்சி மாற்றம் ஏற்படவும் இந்த நடைபயணம் திருப்புமுனையாக அமையும் என்றார். இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் டி.டி.கே.சித்திக், செல்வகுமார், வெங்கடாச்சலம் மற்றும் வட்டார தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பல்லடம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார்.

    • ஓட்டலில் உள்ள கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை மாநிலத்தி லேயே முதல் மாநகராட்சி யாக கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 5 மாதங்களில் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டலில் உணவு தயாரிக்கும் முறை வேதனை அளிப்பதாக உள்ளது. தெருக்களில் உணவு பொருட்கள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படு கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உணவை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது.

    ஓட்டலில் உள்ள கழிவறை களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நள்ளிரவு கடையில் உள்ள கழிவு பொருட்கள் ரோடுகளில் கொட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும். இதற்காக தூய்மை பணியாளர்கள் முழுமூச்சுடன் செயல் பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏராளமான டீக்கடைகள் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டல்கள், டீக்கடைகளிலும் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாத டீக்கடைகள், ஓட்டல்கள் மீது இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டலில்மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது தினமும் 100 டன் குப்பைகள் வருகிறது. இதில் 35 டன் குப்பைகள் மட்டுமே தரம் பிரிக்கப்படுகிறது. 65 டன் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகிறது. பார்வதிபுரம் பகுதியில் ஏற்கனவே டீக்கடையில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். கடைகளை ஆக்கிரமித்து கட்டக்கூடாது. ஆக்கிரமித்துக் கட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக யாரும் சிபாரிசுக்கு வரக்கூடாது. கடைகளை தொடர்ந்து வீடுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் ஆனந்த மோகன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்கு மார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநகராட்சி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் குமார பாண்டியன், மாநகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், பகவதி பெருமாள், தியாக ராஜன், சத்யராஜ்,ராஜா, நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர் கெபின் ஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டகலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வின் வாயிலாக 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த தேர்வு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை ) காலை 10:30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தொடர்ந்து பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர்.

    வடவள்ளி 

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன் தலைமையில் விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.


    இதில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருவர் மற்றும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி , விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • ஆலோசனை கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாவீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பி.எஸ். வருகைதர இருப்பதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்திப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி நகர செயலாளர் காசிராஜன் செய்திருந்தார்.

    ×