என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 210274
நீங்கள் தேடியது "பார்"
சென்னை நுங்கம்பாக்கத்தில் தடையை மீறி ஹூக்கா பார் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் பல இடங்களில் தடையை மீறி ஹூக்கா போதைபார்கள் செயல்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதுபோன்ற பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வந்த ஹூக்கா பார் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலையிலும் ஹூக்கா பார் இயங்குவது தெரியவந்தது.
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வநாக ரத்தினம் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக விக்னேஷ், மணி, செல்வா, பாரதிராஜா, கவுதமராஜ், அமோஸ், தேலு, தேகியாம் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து புகைபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 8 பைப்புகள், 4 பாட்டில் போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹூக்கா போதைக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் அடிமையாகி உள்ளனர். நுங்கம்பாக்கம் ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு இளம்பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள் என்பது தெரியவந்தது. ஹூக்கா சிகரெட் ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews

×

X