search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி"

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். #PopeFrancis #kimjongun #trump
    வாட்டிகன் சிட்டி:

    அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும் அமெரிக்கா - வடகொரியா நாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர்.

    இந்நிலையில், இந்த சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், ‘எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்னும் எனது சிறப்பான நட்புறவின் எண்ணத்தையும், பிரார்த்தனைகளையும் கொரிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #PopeFrancis #kimjongun #trump
    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருவதாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- தமிழகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி பெறவும் தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிறது. பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

    இரவு பத்மாவதி விடுதியில் தங்கிய அமைச்சர் உதயகுமார் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்திருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். #TNMinister #Udhayakumar #Tirupati
    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். #steliteprotest #RajnathSingh
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது, துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாகவும், தற்போது தூத்துக்குடியில் நிலவும் சூழ்நிலை குறித்தும் தமிழக அரசு விரிவான விளக்கத்தினை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.



    மேலும், தூத்துக்குடி மக்கள் அமைதி காக்குமாறும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். #steliteprotest #RajnathSingh
    அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.



    அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi
    ×