search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டப்ளின்"

    அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. #NZWvIREW #FirstOneday
    டப்ளின்:

    அயர்லாந்து - நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் பேட்ஸ், வாட்கின் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். வாட்கின் 59 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து பேட்ஸ் உடன் எம்எல் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அயர்லாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பேட்ஸ் 94 பந்தில் 24 பவுண்டரி, 2 சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் 77 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 121 ரன்கள் குவித்தார்.

    அதன்பின் வந்த ஏசி கெர் 45 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.



    அயர்லாந்து சார்பில் காரா முர்ரே 2 விக்கெட்டும், லாரா மாரிட்ஸ், கேபி லெவிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 491 என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது. பேட்டிங்கில் அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சிலும் அசத்தியது.

    இதனால் அயர்லாந்து அணியை 36.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அயர்லாந்து அணி சார்பில் கேப்டன் லாரா டெலானி 37 ரன்னும், ஜெனிபர் கிரே 35 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    நியூசிலாந்து அணி சார்பில் லே காஸ்பிரேக் 4 விக்கெட்டும், ஹன்னா ரோவி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து,
    அயர்லாந்து அணியை 346 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. #NZWvIREW #FirstOneday
    ×