search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • பிப்ரவரி மாதம்19-ந் தேதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார்.
    • 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பலியானார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடைசியாக பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார். 7 மாதங்களாக கொரோனா இறப்பு இல்லை. பாதிக்கப்படுவோர் தொற்றில் இருந்து மீண்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த, 20ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பலியானார். இவர் அனுமதியாகும் போதே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. 95 சதவீதம் பாதிப்பு இருந்ததால், தொற்றில் இருந்து மீண்டு வர முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    • மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • முதியவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் காட்டு விளையை சேர்ந்தவர் சேசையன் (வயது 72). மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீராததால் அவதிப்பட்டு வந்த சேசையன் சம்பவத்தன்று மாலை விஷ மாத்திரை தின்று வீட்டு மாடிக்கு சென்றார். அங்கு வாந்தி எடுத்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேசையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஆல்பர்ட் ராஜுவ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாஜி ரோடு பகுதிைய சேர்ந்தவர் நடராஜன் (வயது 79). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து அவர் அதிகளவில் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்ைச அளித்து காப்பாற்றினர். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சிதம்பரம் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய்.
    • இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய். இதை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது‌. இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை .

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு மரத்தில் தொங்க விட்டுள்ளனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

    சென்னிமலை டவுன் அருகே உள்ள வனப்ப குதியில் மலைக்கணுவாய் அருகில் உள்ள மரத்தில் முதியவரின் உடல் தொங்கியது சுற்று வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக்மோதியது.
    • வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி(வயது 71 )என்பவர் நேற்று காலை வெள்ளகோவில் நோக்கி செம்மாண்டம் பாளையம் மேடு என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப் போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக்மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கந்தசாமி சம்பவ இடத்தில் இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கே.ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கந்தசாமி வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மண்டல குழு உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொண்டியில் குடும்பத்தை பிரிந்த முதியவர் இறந்தார்.
    • முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பனஞ்சாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (68). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தொண்டி பகுதியில் கடைகளில் பிச்சை எடுத்து சாப்பிட்டு பஸ் நிலையத்தில் உறங்கி வந்தார். இந்த நிலையில் முதியவர் கோவிந்தராஜன் பஸ் நிலையத்திலேயே இறந்தார். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், கிராம உதவியாளர் அந்தோணிசேகருக்கு தகவல் தெரிவித்தார். தொண்டி போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இறந்தவரின் குடும்பத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினர் முதியவர் உடலை அடக்கம் செய்ய முன் வராமல், தகவல் கொடுத்தவர்களிடம் நீங்களே அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்களாம். இதையடுத்து பேரூராட்சி தலைவர், பணியாளர்களைக் கொண்டு தொண்டி பொது மயானத்தில் இந்து முறைப்படி முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .
    • மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .

    அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • துணை ஆணையா் அபினவ்குமாா் மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கோவில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகம், தென்னம்பாளையம் காலனி சக்தி விநாயகா் கோவி வளாகம், கே.எம்.ஜி.நகா் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் கடந்த 6-ந்தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது.

    இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (வடக்கு சரகம்) அபினவ்குமாா் மேற்பாா்வையில் உதவி ஆணையா்கள் பி.என்.ராஜன், கண்ணையன் ஆகியோா் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படையினா் சம்பவம் நடைபெற்ற கோவில்களில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனா்.இதில் திருப்பூா் வெள்ளியங்காடு திரு.வி.க.நகரைச் சோ்ந்த மருதாசலம் (வயது 62) சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருதாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தாா்.சிலைகளை சேதப்படுத்திய நபரை 48 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை பொதுமக்கள்- போலீஸ் அதிகாரிகள் பாராட்டினா்.

    • ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து முதியவரிடம் நூதன திருடப்பட்டது.
    • நகை வாங்கி வந்தவரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம், ஜே.கே. நகரை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 68). இவர் இரவு மதுரை மேலமாசி வீதியில் உள்ள நகை கடையில், குடும்பத்தினர் இல்ல திருமண விழாவுக்காக நகைகள் வாங்கினார். அதன் பிறகு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை மேல மாசி வீதி, மதனகோபாலசாமி கோவில் எதிரே, மர்ம நபர் ஒருவர் வழிமறித்தார். அவர் நான் ஒரு ஜி.எஸ்.டி அதிகாரி. உங்களின் நகைகளை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    அதனை நம்பிய சூரிய மூர்த்தியும் தான் வாங்கிய நகைகளை அவரிடம் கொடுத்தார். அவற்றை சரிபார்ப்பது போல் நடித்த அந்த நபர், மீண்டும் நகைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து சூரியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தான் வாங்கிய நகைகளை சரிபார்த்தார்.அப்போதுதான் ரூ.70 ஆயிரம் மதிப்புடைய 20 கிராம் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியமூர்த்தி, இது பற்றி மதுரை தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை ஏமாற்றி எடுத்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்த பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் பாதிப்பால் அவரது கால் விரல்களும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவதி பட்டு வந்தார். இதனால் வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்தார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
    • வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தபோது விபத்து

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தார்

    பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு முத்தையன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முத்தையனை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது முத்தையனிடம் ஸ்ரீஜித் குடிக்க பணம் கேட்டார்.முத்தையன் பணம் கொடுக்காததால் அவரை பிடித்து ஸ்ரீஜித் கிழே தள்ளியுள்ளார்.இதில் முத்தையன் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்தையன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முத்தையன் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்தையனை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். இதுகுறித்து முத்தையன் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்
    • போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்களம் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போன்று வீரமங்களம்காமராஜர் நகரில் 70க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வழக்கமாக மாற்று ஊராட்சியான, பொன்னாலூர் வயல்காடு பகுதியில் தூக்கிச் செல்வார்கள். தற்போது பெய்ததால், அவ்வழியாக ரதவாகனம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்நிலையில் காமராஜர் நகரை சேர்ந்த கந்தையா (வயது71) என்பவர் நேற்று இரவு இயற்கை மரணம் அடைந்தார். அதனையடுத்து அவரது உடலை காமராஜர் நகரிலிருந்து பெரியவீரமங்களம் வழியாக எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதற்கு வீரமங்களம் பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதையடுத்து இறந்தவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீரமங்களம் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×