search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 10 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பஸ்சில்இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் "திடீர்"என்று மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் நெல்லை மாவட்டம் பழவூரைச்சேர்ந்த நடராஜன் (வயது60) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 60).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வீட்டுக்கு புறப்பட்டார். கல்லுக்கட்டி அருகே வரும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் பீர் முகமது மற்றும் மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த தேங்காய் பட்டினத்தை சேர்ந்த லிபின்(24),மருதம் கோட்டை சேர்ந்த ஜிஜோ (22) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீர்முகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராபியா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சி கோவில் ரோடு வெள்ளி யம்பாளையம் பகுதி சேர்ந்த வர் செல்வம் (வயது 68). இவர் மின் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகள் கவுசிகா பெருந்துறையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வம் தனது மகளை பார்த்து விட்டு பெருந்துறை யில் இருந்து வெள்ளிய ம்பாளையம் செல்வதற்காக பேரன் கவினேஷ் (11), பேத்தி நசுதனா (4) ஆகி யோரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அவர் காஞ்சிகோவில் ரோடு பைபாஸ் அருகே ரோட்டை கடக்க ரோட்டோ ரத்தில் நின்று கொண்டி ருந்தார். அப்போது கோவைக்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கி ளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே நிழற்குடையில் முதியவர் பிணமாக கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிழல் குடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரணை செய்தபோது இவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்து விவரம் தெரிந்தால் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் அவர் கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட கைலி, முகத்தில் அதிக அளவு தாடியுடன் உள்ளார்.

    • கடலூரில் வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து முதியவர் தீ குளிக்க முயன்றார்.
    • சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டினை சுந்தரேசன் (வயது 65) என்பவர் பயன்படுத்தி வருகிறார். இந்த வீட்டுக்கு வாடகை பாக்கியாக ரூ. 5 லட்சத்து 21 ஆயிரம் உள்ளது. இதனை கட்டாமல் இருந்ததால் அந்த வீட்டை காலி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரன் தலைமையில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் ராஜாம்பால் நகருக்கு சென்றனர். அப்போது சுந்தரேசன் வசித்து வந்த வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தரேசன் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உஷாரான போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் சுந்தரேசனிடம் கூறுகையில், கோர்ட்டு உத்தரவு படிதான் நாங்கள் சீல் வைக்க வந்துள்ளோம். எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதற்கு சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார். உடனே அதிகாரிகள் அதற்குள் வாடகை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கும் சுந்தரேசன் கால அவகாசம் கேட்டதால் மறுத்த அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

    • பெருந்துறை பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு.
    • பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதை அறிந்த சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அவரிடம் விசாரித்தார்.

    அப்போது அவர் நசியனூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (80) எனவும் டெய்லராக வேலை பார்த்து வந்ததும், இவரது மனைவி இறந்து விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அந்த முதியவரை மீட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர் ஜெயபால் ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    • நாகர்கோவிலில் மனு கொடுக்க வந்த போது பரிதாபம்
    • கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து செல்கிறார்கள்.மனு கொடுக்க வருபவர்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் நடந்து வந்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    இன்று காலையில் மனுகொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.மனு கொடுக்க வந்த முதியவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த முதியவரை அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கார் மோதி முதியவர் பலியானார்.
    • நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி இந்திரா நகரை சேர்ந்தவர் பாப்பாநாயக்கர் (வயது 70). இவர் சம்பவத்தன்று திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கோராகுத்தி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், தொட்டியம் எம்.புத்தூரை சேர்ந்த கேசவன் (23) என்பவர் ஓட்டி வந்த கார் பாப்பாநாயக்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாப்பாநாயக்கர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பாப்பாநாயக்கர் மகன் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்(34)இவருடைய தந்தை சுப்பிரமணி (67). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் பவானியை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கோபால் ஓடி வந்தார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.

    அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே வந்து கொண்டிருந்த பொழுது வடமாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிர மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ெமாபட் ஓட்டி வந்த ரவிக்குமார் என்பருக்கு காயம் ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பேரையூர் அருகே வட்டி தொழில் செய்த முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
    • அவரது கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்(வயது75). இவரது மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    2 மகன்கள் திருப்பூரிலும், 1 மகன் மதுரையிலும், மகள் பி.தொட்டியபட்டி கிராமத்திலும் உள்ளனர்.கணவன்-மனைவி தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை பேரையூர்- உசிலம்பட்டி சாலை அருகே சவுண்டையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத தொட்டியில் சங்கரன் பிணமாக கிடந்தார்.

    அவரது கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். இதுகுறித்து பேரையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. இலக்கியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது கிணற்று பகுதியில் இருந்து வயல் வழியாக சிறிது தூரம் சென்று நின்று விட்டது.

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதபடுத்தினார். கொலையுண்ட சங்கரனின் மனைவி பொன்னுத்தாயிடம் போலீசார் விசாரித்த போது நேற்று இரவு 2 மணி வரை நான் வீட்டில் இருந்தேன். அதன் பிறகு தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை என்று தெரிவித்தார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சங்கரன் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    பணம் வாங்கியவர்கள் யாரேனும் திருப்பி கொடுக்க மறுத்திருக்கலாம். அதை கேட்ட சங்கரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ெதரிவித்தனர்.

    மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டி–ருந்த சங்கரனை கடத்தி கொலை செய்தா–ர்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்றும் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொட்டியபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலம் அருேக முதியவர் ஒருவர் லாரி மோதி பலியானார்.
    • வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(வயது 55). இவர் நேற்று இரவு 7:45 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது தெரியவில்லை.
    • மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை மேலவெளிவீதி பிரேமாவிலாஸ் கடைமுன்பு நேற்று (31-ந் தேதி) காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அடிவயிற்றின் இடதுபுறம் கருப்பு மச்சமும், வலது முன்னங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.

    முதியவரின் உடல் மதுரை அரசு மருத்துவனை சவக்கிடங்கில் உள்ளது. இதுகுறித்து மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×