search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (77). இவர் தனது மகள் புஷ்பலதா வீட்டில் வசித்து வந்தார். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி இருந்து உள்ளது.

    வயிற்று வலிக்காக ராமகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி அதிகமாக இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவர் குடித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் உள்ள அறையில் ராமகிருஷ்ணன் தூங்க சென்றார். அவரது மகள் புஷ்பலதா மற்றொரு அறையில் தூங்கி கொண்டி ருந்தார்.

    அதி காலை 4 மணி அளவில் தந்தை படுத்து தூங்கிய அறையில் லைட் எரிந்ததால் என்னவென்று பார்க்க புஷ்பலதா அவரது அறைக்கு சென்றார்.

    அப்போது ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு, பெட்ரோல் பங்க் அருகே சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கதினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் துணை போலீஸ் சூப்பிரண்டு, வேட்டைகாரனிருப்பு போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றனர்.

    • ெரயிலில் அடிபட்டு கிடந்த முதியவர் மீட்கப்பட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் கரூர் ெரயில்வே தண்டவாள பாதையில் ஹோம் சிக்னல் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக புகளூர் ெரயில்வே நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ெரயில்வே நிலைய அதிகாரிகள் மயங்கி கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் ெரயில்வே போலீசார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் அடையாளம் தெரியாத நபர் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
    • சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மதுரை

    வண்டியூர் சி.எம்.நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது75). இவர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மனைவி வில்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    இடலாக்குடி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வீட்டின் முன்பு பிணமாக கிடந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகேயுள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(75). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்யாணியின் மகன் தங்கப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
    • 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (73). இவர், மோளகவுண்ட ம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 நாள்களாக உடல் நிலை சரி இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மில்லுக்குள் சாம்பல் கொட்டும் இடத்தில் முத்துசாமி நேற்று மதியம் 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, முத்துசாமியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலு கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
    • அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொளத்தூரை சேர்ந்த அங்குபிள்ளை (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). கடந்த 5 வருடமாக பெருந்து றை மடத்துப்பா ளை யம் பிரிவு அருகே அமைந்துள்ள மோட்டார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் வேலைக்கு வரும் பொழுது மது அருந்தி வந்துள்ளார். மேலும் ராம சாமி வயிற்று வலி காரண மாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று காலை ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் அருகே உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு ந்து ள்ளார்.

    உடன் பணி புரிந்தவ ர்கள் இதைக்க ண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு அ வரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்க னவே ராம சாமி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்ப வம் தொட ர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    • பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
    • பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தோளில் சுமார் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்தார்.

    இதனை கண்டு மதுவாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த முதியவர் லாவகமாக அந்த பாம்பை கையாண்டார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பாம்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது தோளில் நெளிந்து கொண்டு இருந்தது.

    இதனை கண்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தி முதியவர் பாம்புடன் நிற்கும் காட்சியை கண்டு ரசித்தனர். சிலர் இதனை தங்களது செல்போனிலும் வீடியோவாக எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறிது நேரம் கழித்து அந்த பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் அந்த பாம்பை அருகில் உள்ள புலிப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள புதரில் விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் வந்தபோது சாலையின் குறுக்கே இந்த பாம்பு ஊர்ந்து சென்றது. வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதால் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டேன்" என்றார்.

    • தீயணைக்கும் படையினர் உயிருடன் மீட்டனர்
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி நாச்சி யார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55).இவர் நேற்று கன்னியா குமரி கடற்கரைச் சாலை அருகேயுள்ள வியூ டவர் பாறையில் நின்று கொண்டி ருந்தார்.

    அப்போது அவர் திடீ ரென கடலில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர் சுபாஷ், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் துரைசிங் ஆகி யோர் அடங்கிய போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதேபோல் தீயணைப்பு நிலைய போலீசாரும் பாது காப்பு கருதி வரவழைக்கப்ப ட்டனர்.தொடர்ந்து கடலில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமார் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

    அவரை போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஜெயக்குமா ரின் உறவினர்க ளுக்கு போலீசார் தகவல் தெரி வித்தனர்.சிகிச்சைக்கு பின் அவர் பாதுகாப்பாக வீடு திரும்பினார்.

    ஜெயக்குமாரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×