search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார்.
    • இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60).

    இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.

    இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த ரங்கசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.

    • மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடந்தார். 

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதியவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனையில் அருகில் உள்ள வார்டு அருகே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மேரிபா வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை செய்து வருகிறார்.

    • கடந்த சில நாட்களாக பழனிச்சாமி பற்றி எந்த தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.
    • குடும்பத்தினர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடதுரை அருகே உள்ள பெரியகோட்டை பாறைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது72). கூலித்தொழிலாளியான இவர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு 2 அல்லது 3 நாட்கள் கழித்து வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக அவரைப்பற்றி எந்த தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இதனால் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்துள்ளார். அவர் பழனிச்சாமிதானா? என்று பாருங்கள் என கூறி உள்ளனர். முகம் சிதைந்து இருந்ததால் உறவினர்களும் சரிவர பார்க்காமல் இவர்தான் பழனிச்சாமி என்று கூறி உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் உடலை ஒப்படைத்து கையெழுத்து பெற்று விட்டனர். வீட்டிற்கு கொண்டு வந்து அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று இறந்ததாக கருதப்பட்ட பழனிச்சாமி உயிருடன் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தான் வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு சென்றதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை என வீட்டில் கூறினார்.

    பழனிச்சாமி வீட்டிற்கு திரும்பிய அதிர்ச்சி ஒருபுறம் இருக்க நாம் யாருக்கு இறுதிச் சடங்கு செய்து காரியம் நடத்தினோம் என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
    • பாதிக்கப்பட்ட முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 58 வயது முதியவர் ஒருவர்  சித்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், முதியவரிடம் நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன். உங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

    முதியவரும் அதனை நம்பினார். அதன்பின்னர் தொடர்ந்து 2 பேரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.

    இந்த நிலையில் ஒருநாள் முதியவரை போனில் தொடர்பு கொண்ட இளம்பெண், நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாம் இருவரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம் என கூறினார். நாம் எப்போது சந்திக்கலாம் என கேட்டிருக்கிறார். முதியவரும் பெண்ணின் பேச்சில் மயங்கி அவரை நேரில் சந்திப்பதற்கு ஆசை தெரிவித்தார்.

    அதற்கு அந்த பெண் நீங்கள் என்னை சந்திக்க வரும் போது டிப்டாப் உடையணிந்தும், நகைகளை அணிந்தும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். எதற்கு என்று முதியவர் கேட்க, நீங்கள் டிப்டாப் உடையில் நகை அணிந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என ஆசை வார்த்தையை அள்ளி வீசினார்.

    முதியவரும் இளம்பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டவராக, டிப்டாப் உடையணிந்து கொண்டார். மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து அணிந்து கொண்டு இளம்பெண்ணை பார்க்க போகும் ஆவலில் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    போகும் வழியில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறினார். அங்கு சென்றதும் இளம்பெண்ணை, முதியவர் சந்தித்தார்.

    பின்னர் இளம்பெண், முதியவரை கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் இவர்களின் அருகே வந்தார். வந்த வேகத்தில் முதியவரை பார்த்து, நீ யார் எப்படி என் மனைவியுடன் பேசி கொண்டிருப்பாய் என கேட்டார்.

    மேலும் முதியவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்குமாறு செல்போனில் புகைப்படமும் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

    பணம் தராவிட்டால் இந்த புகைப்படத்தை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகையை பறித்த இளம்பெண் மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
    • இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் வெள்ளை, காபி கலரில் கோடு ேபாட்ட ரெடிமேட அரைகை சட்டை, பச்சை, கருப்பு நிற பாக்கெட் வைத்த டிரவுசர் அணிந்திருந்தார். இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து மோகனூர் ரெயில் நிலையத்தின் அதிகாரி சேலம் ரெயில்வே போலீ சாருக்கு த கவல் தெரிவி த்தார். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் உடல் ஆஸ்பத்திரி பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி ஏேதனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி ரெயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
    • தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது80). இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தது.

    தந்தை குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தார். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மதியம் முதியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம், பச்சப்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) . இவர் நேற்று மாலை வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பின்னால் வந்த கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் ஏழை எளிய மக்கள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் வெட்டையன் கிணறு, துடுப்பதி, திருவாச்சி, கந்தாம்பாளையம், முள்ளம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திராசுந்தரம் நேரடியாக சென்று துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு, திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோலி பிரகாஷ், வேட்டையன் கிணறு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராஜா முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் பூர்ணிமா, சதீஷ்குமார் சுரேஷ், ஈஞ்சம்பாளையம் திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது.
    • திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், வஞ்சிபா ளையத்தை சேர்ந்தவர், மாணிக்கம் (58).இவர் கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக, திருச்சி - பாலக்காடு டவுன் ரயிலில் ஏற, வஞ்சிபாளையம் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

    அப்போது தண்டவா ளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலாடி அருகே முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    முதுகுளத்தூர்

    கடலாடி தாலுகா இளஞ்செம்பூர் அருகே சின்னபொதிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாணிக்கம் (வயது 37). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மலைச்சாமி (65) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பூ மாணிக்கம் வீட்டிலிருந்தபோது மலைச்சாமி அவரை அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பூ மாணிக்கம் இளஞ்செம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மலைச்சாமியை தேடி வருகிறார்.

    • குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மூங்கில் பாளையம் பகுதி சேர்ந்தவர் குஞ்சான் வயது 65. இவர் தனது மனைவி சென்னியம்மாள், மகள் பூங்கொடி, மருமகன் பாண்டியராஜ் மற்றும் பேத்திகளுடன் குடியிருந்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து அளவுக்கு அதிகமாக முடித்துவிட்டு போதையில் வந்த குஞ்சான் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி சத்தம் போடாமல் போய் தூங்குங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவு அவரது மருமகன் பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குஞ்சான் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62) . இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கரட்டுப்பாளையம்- மயில்ரங்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.

    இதை கண்ட அந்த வழியாக சென்ற நபர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×