search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212363"

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கொருக்கை அரசு பாலிடெக்னிக்கில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரமோகன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மரம் நட்டு தொடங்கி வைத்தார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

    சென்னை அன்னை பழமுதிர்ச்சோலை நிறுவனர் முனைவர் அரிமா.ரவிச்சந்திரன், கொறுக்கை ஊராட்சி மன்றத் தலைவர்ஜானகிராமன், கல்லூரி கண்காணிப்பாளர் குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து மரம் நட்டனர்.

    கொறுக்கை பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி , மன்ற உறுப்பினர் கலாவிஜேந்திரன் மற்றும் கல்லூரியை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும், கொறுக்கை வாழ் மக்கள் 72 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

    • மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • தேரூர் பேரூராட்சி தலைவி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    நாகர்கோவில்:

    ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் கல்லூரி ஸ்கவுட் ரோவர்ஸ் அமைப்பு மற்றும் தேரூர் பேரூராட்சியும் இணைந்து உலக சுற்றுச் சூழல் தின விழாவை நடத்தினர்.

    கல்லூரி துணைத் தலைவர் அருள் ஜோதி தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மற்றும் புனிதா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சுற்றுச் சூழல் குறித்து கல்லூரி துணைத் தலைவர். அருள் ஜோதி பேசுகையில், தொழில் நுட்ப, தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது என்றும் ரசாயனக்கழிவுகள் புகை போன்றவை நீர் நிலைகள், வளிமண்டலம் போன்ற வற்றை மாசுபடுத்துவதோடு உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் பேசினார்.

    மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி பேராசிரியர் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக மாணவர் பெஞ்சமின் வரவேற்புரையாற்ற மாணவி சிக்லின் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ் மேலாளர்கள் கோபி மற்றும் நிதி மேலாளர் சேது.கல்லூரி பேராசிரியர்கள் துரைராஜ். சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி. அலுவலக செயலர் சுஜின், கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஜாண் டிக்சன், பெபின். ஜெனில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் உத்தரவுப்படி, சார்பு நீதிபதி சுதா வழிகாட்டுதலின்படியும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    அப்போது நாமும் நம் குடும்பத்தினர் ஒவ்வொ ருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று ஆவது நட்டு பராமரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.இதில் அரசு வழக்கறிஞர் வெற்றி செல்வன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்கம்பன், ஜெயகுமார் மற்றும் வழக்கறிஞர்கள்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் பாபநாசம் கிளை சிறையின் கண்காணி ப்பாளர் திவான், கிளைச் சிறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    • மயிலாடுதுறை அருகே உலக சுற்றுசூழல் தினவிழா நடைபெற்றது.
    • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

    இவ்விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.

    தொடர்ந்து தனியார் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, பூமி மாசுபடுவதை தடுக்க மரக்கன்று நடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமைப்படை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது,

    உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், தங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை முறையாக பராமரித்திட வேண்டும்.

    மேலும், மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் தேவையற்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்று கிடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

    மரங்கள் மழை வளம் பெருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இயற்கை சம நிலை மேம்படைவதற்கும், புவி வெப்ப மயமாதலை குறைப்பதற்கும் இயற்கை சீற்றங்களை தணிக்கக் கூடிய தன்மையும் மரங்களுக்கு உண்டு.

    மேலும், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை மரங்கள் உருவாக்குகின்றன. மனிதனின் வாழ்வில் மரங்கள் என்பது இன்றியமையாதவையாகும். மரங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்து கொண்டு பிறருக்கும் அதன் தேவையை எடுத்துரைக்க வேண்டும்.

    எனவே, மாணவர்களாகிய நீங்கள் பூமி மாசுபடுவதை தடுத்து பூமிக்கு மேல் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்திடவும் இயற்கையோடு ஒன்றிட எதிர்கால சந்ததியினருக்காக மரக்கன்றுகளை நாம் நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
    ×