search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவுகள்"

    மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

    இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.



    மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

    மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

    விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    இந்த தேர்வு முடிவுகளை (www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். 
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.

    காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #Plus2Result #HSCResult #Plus2100%Pass
    சென்னை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.

    பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

    ஒட்டுமொத்தத்தில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,754. இதில் 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


     
    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு விவரங்களை http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #Plus2Result  #HSCResult #Plus2100%Pass
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 21-ம் தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். #Plus2Result #HSCResult #+2Result
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.



    21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

    விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

    விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.  #Plus2Result  #HSCResult #+2Result
    ×