search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்காணம்"

    மரக்காணம் அருகே டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் தொழிலாளி.

    இவரது மகள் ஷாலினி (வயது 18). இவர் புதுவை அருகே சேதாரபட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஷாலினி வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் தாய் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இப்படி எப்பொழுதும் டி.வி. பார்த்து கொண்டிருக்கிறாயா? எனக் கூறி ஷாலினியை திட்டினார்.

    இதில் மனம் உடைந்த ஷாலினி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    மரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.

    மரக்காணம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது உலகாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாபு(வயது 63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளான். இவரது மனைவி சுபாஷினி. நேற்று இரவு சாப்பிட்ட பின் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். காற்றிற்காக கதவை திறந்து வைத்திருந்தனர்.

    நள்ளிரவு 2 மணியளவில் 3 மர்மமனிதர்கள் நைசாக வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் டிரவுசர் அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் எண்ணை தடவி இருந்தனர். வீட்டிற்குள் புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ரொக்க பணத்தையும், 37 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபு திடுக்கிட்டு எழுந்து உள்ளே சென்றார். அங்கு 3 கொள்ளையர்கள் டிரவுசருடன் நிற்பதை கண்டு கூச்சல்போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் எழுந்தனர். அப்போது வீட்டில் இருந்து 3 கொள்ளையர்கள் வெளியே ஓடினர். அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் பாபு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து வெளியே சென்று நின்றது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
    மரக்காணம் அருகே இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்த புதுவை வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 42). இவரது மனைவி ரேவதி(32). இவர்கள் நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காற்றுக்காக வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ரேவதியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதில் திடுக்கிட்ட எழுந்த ரேவதி திருடன்... திருடன்... என அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த பச்சையப்பன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் நகையுடன் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். வாலிபர் திருடிச்சென்ற தங்கசங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ரேவதி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ரேவதியின் தங்கசங்கலியை பறித்து சென்ற வாலிபர் புதுவையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் புதுவைக்கு விரைந்துள்ளனர்.

    ×