என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள்"

    • அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சீமான், பிரேமலதா உள்ளிட்டோரும ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

    நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சீமான், பிரேமலதா உள்ளிட்டோரும ஏற்கனவே வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    • நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் அவர்," என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை நாங்கள் தினமும் அதிகமாக நேசிக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.." என குறிப்பிட்டிருந்தார்.

    • இல்லம் தேடி சென்று இளைஞர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மாவட்ட ஒன்றிய, நகர ,பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்று பேசினார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ராஜேஷ் கண்ணா , கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    தி.மு.க. தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி ஆதரவற்ற , முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    அன்றைய தினம் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வாக்குச்சாவடி முகவர்கள் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழா வருகிற 27-ந் தேதி வருகிறது. அந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வட்ட, கிளை செயலாளர்கள் தங்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை இளைஞரணியினர் பங்காற்ற செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவபாலன், கோட்டா பாலு மற்றும் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் 45-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தி.மு.க. சார்பில் தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார் . தொடர்ந்து கட்சி கொடியேற்றி ஒவ்வொரு வட்டத்திலும் ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, கார்த்திகேயன், ஆர்.கே. நீலகண்டன், மண்டல பொறுப்பாளர்கள் கலையரசன், நகர நிர்வாகிகள் சுப்பிரமணியன், எழில், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், ஆனந்த், வட்ட செயலாளர்கள் அண்ணா.பிரகாஷ், கார்த்திகேயன், ராஜகுமார், ராஜேந்திரன், ராஜா,

    மாமன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான் இப்ராஹிம், சந்திரலேகா சசிகுமார் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.
    • பா.ஜ.க மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டம் எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.

    சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றார். பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளான கடலூர் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்கு மரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கர் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவர் வைரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

    திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி.

    இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

    இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது.

    இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார்.

    அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின.

    ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

    • நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

    32-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இரு அணியினரை நகர செயலாளர் கே.பி. எஸ் பழனியப்பன முன்னிலையில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து ேபாட்டியை தொடங்கி வைத்தனர். முதல் பரிசை துவார் அணியும், 2-ம் பரிசை குளத்துப்பட்டி அணியும், 3-ம் பரிசை துவார் செந்தில் நினைவு குழு அணியும், 4-வது பரிசை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் தட்டிச் சென்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி சின்னையா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், குளத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்சேதுராமன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், துவார் முக்கையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜலாலுதீன், நடராஜன், பேரூர் கவுன்சிலர்கள் அழகு, அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன், துணை அமைப்பாளர் வீரமணி, மன்சூர், விக்னேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள் வழங்கினார்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தம்மன் தலைமையில் நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகர தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவனுக்கு மிதிவண்டி, மாற்று திறனாளிகள் 3 பேருக்கு வண்டி, கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள்,தொழில் செய்ய முனைவோருக்கு அவர்கள் விரும்பிய தொழில் செய்ய உதவும் உபகரணங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர், நகர தலைவர் சுகுமார், வட்டார தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
    • கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    குத்தாலம்:

    யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.

    இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.

    அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

    இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை
    • அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பு

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து கன்னியா குமரி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், தொழிற் சங்க செயலாளர் சுகுமா ரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதி யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாநகர செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயாகண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாகதேவன், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஜெயகோபால், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ெரயிலடி மாதவன், சகாயராஜ், ரபீக், வெங்கடேஷ், ராஜாராம், கோட்டார் கிருஷ்ணன், கே.சி.யூ.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி னார்கள். கிழக்கு மாவட்டத் திற்குட்பட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.

    • மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • மேலும் அரசு சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மன்னர் திருமலைநாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், முருகேசன் ஆகியோர் தலைமையில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலையில் ஊர்வலமாக வந்து திருமலை நாயக்கரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இனை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், சோலை இளவரசன், ரகுதேவன், மீனவரணி ராமநாதன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி உசிலை பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார்.

    இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சிவா, கொடிவைரன், யோகராஜ், துதி திருநாவுகரசு, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன், சிதம்பரம், ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், அர்ஜுனன், நாச்சியப்பன், புல்லட் ராமமூர்த்தி, கிரி சாத்தன உடையார், பத்ரி முருகன், முருகவேல், இன்பம், ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×