search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்பாடு"

    காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அம்மாநில அமைச்சரவையில் எந்த கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

    அதன்படி, கர்நாடக அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 துறைகளும், காங்கிரஸ் கட்சிக்கு 22 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், சுற்றுலா, கூட்டுறவு, போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



    இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை, நீர்ப்பாசனம், சுகாதாரம், வேளாண், வனம், விளையாட்டு, வருவாய், சமூக நலத்துறை, ஊரக, நகர்ப்புறத்துறை உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட துறைகளின் மந்திரிகள் பதவியேற்கும் விழா வரும் 6-ம் தேதி நடைபெறும் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார். #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    ×