என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொந்தரவு"

    • மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக புகார்
    • ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சிறுமியுடன் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி (வயது 23) என்பவர் பழகி வந்தார். தொடர்ந்து ஆசைவார்த்தைகள் கூறி பழக்கத்தை அதிகப்படுத்தினார்.

    இதனால் மாணவி அவர் நல்லவர் என நம்பினார். திடீரென மணி, மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தனது ஆதரவாளர்களுடன் கடத்திச் சென்று மாணவியை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். இதனால் மாணவி மனம் உடைந்தார்.

    அதிர்ச்சியில் உறைந்த மாணவி இது தொடர்பாக கைகாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து வாலிபரின் தந்தை அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகாத்தான் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

    சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கு காரணமானவர்கள் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். 

    • நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள்.
    • எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம்.

    சேலம்:

    சேலம் அருகே பாலியல் தொந்தரவு செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த மாணவி எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 31.08.2022 அன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராணி என்பவர் என்னை அழைத்து பேசி என்னுடைய சான்றிதழை பொய் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார்.

    நான் குளியல் அறைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் உள்ள ராணி, ராமசாமி, மணி ஆகிய 3 பேரும் மயக்க மருந்து அடித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். அப்போது எனது அருகில் 2 பேர் இருந்தனர்.

    நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

    என்னை தவறாக படம் பிடித்து மிரட்டினார்கள். மறு நாள் சமயபுரம் கோவிலுக்கு சென்றதாக சொல் என்று சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இல்லையென்றால் தவறாக படம் எடுத்து வைத்து இருப்பதை உனது அண்ணனுக்கு அனுப்பினால் உனது குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டினர். தொடர்ந்து மணி என்னை மிரட்டினார். இதனால் பயத்தில் மன குழப்பத்துடன் தவித்த நான் போலீஸ் நிலையத்தில் சென்று கோவிலுக்கு சென்றதாக சொன்னேன்.

    தினமும் என்னை பக்கத்து வீட்டில் உள்ள அனைவரும் மிரட்டினார்கள். ராமசாமி என்பவர், மேஜர் ஆனதும் என்னை கடத்தி விடுவேன் என மிரட்டினார். எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் காரணம் இல்லை. என் குடும்பத்தார் என்னை துன்புறுத்தவில்லை. என் குடும்பத்தை துன்புறுத்த வேண்டாம். தற்கொலைக்கு காரணமான மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள எனது போட்டோக்களை காண்பித்து மிரட்டுகின்றனர்.

    இவ்வாறு அந்த மாணவி கண்ணீர் மல்க எழுதியிருந்தார்.

    மேலும் திருமணத்தின்போது சாந்தி, சத்யா, சத்யாவின் கணவர், மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர் எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

    • டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
    • பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர் மீது, பின்னால் வந்த ஒரு கார் மோதும் அபாயம் இருந்தது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிலர் உதவி செய்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அந்த பெண், ஆட்டோவில் இருந்து குதித்தது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் ஹமீத், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பொதுவான சில கேள்விகளை கேட்டுள்ளார். சிறுமியும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார். அதன்பின் ஆட்டோ டிரைவர் படிப்படியாக அந்த சிறுமியை அச்சம் கொள்ள செய்யும் வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஆட்டோவையும் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி, கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சாலையில் இருந்த சுமார் 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ஹமீத் மும்பையைச் சேர்ந்தவர். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவுரங்காபாத் வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • முனியாண்டி அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
    • குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (32) இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில் முனியாண்டி மீது படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது செங்கல்பட்டு போக்சோ கோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். அரசு தாப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார்
    • சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள எறும்புக்காடு அகதிகள் முகாமில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் சிவானந்தன் (வயது 54).

    இவரது கடைக்கு சம்பவத்தன்று 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாததை பயன்படுத்தி, அந்த சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், உடனடியாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாணவியை அழைத்து சென்று புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வியாபாரி சிவானந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
    • வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே பகுதியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தென்கழனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியரின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • தட்சிணாமூர்த்தி 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பெரிய நெல்லிக்காய் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 63). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் போக்சோ சட்ட த்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி கைது செய்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
    • வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.

    போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல்
    • வாலிபருக்கு வலைவீச்சு

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 10 வயது மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்களது எதிர் வீட்டில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். தொழிலாளியின் வீட்டில் அடிக்கடி வாலிபர் சென்று நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவியை வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர அனுப்பி உள்ளனர்.

    வாலிபர் பள்ளி மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள முட் புதரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • 2 பேர் போக்சோவில் கைது
    • சிறையில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமியின் பெற்றோர் இருவரும் காலையில் வேலைக்காக வீட்டை விட்டு சென்று, இரவு வீடு திரும்புவது வழக்கம்.

    அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் சிறுமியின் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் சென்று தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    இதை வெளியில் கூறினால் உன் அப்பா, அம்மாவை ஒழித்துவிடுவேன் என மிரட்டி அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் முனியாண்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். முனியாண்டி சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரும், சிறுமியிடம் தொந்தரவில் ஈடுபட்டது தெரிந்தது.

    கடந்த சில நாட்களாக வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப் - இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டி மற்றும் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • டாக்டர் மீது போலீசார் வழக்கு
    • பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நாகர்கோவில், ஜூலை.6-

    நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் ஒருவர் செயல்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அலுவலக பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு டாக்டர் வந்துள்ளார். அவர், பெண் அலுவலர் இருந்த அறையை பூட்டிவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்ததால், டாக்டர் அவரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, பெண் அலுலவரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேசமணி நகர் போலீசார், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×