search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • புளியால் அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 4 இடம் பெற்ற மாணவர்களுக்கு பணமுடிப்பு, பரிசளிப்பு விழாவும், டிரஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும், மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாவட்ட அலுவலர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இளையாராஜா, முன்னாள் மாணவர் முருகேசன், புளியால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு-நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    ஆசிரியர்கள் கருணா, அருள் செல்வா, பரிது காதர் பிச்சை, பிச்சை மரக்காயார், சமூக ஆர்வலர் கிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • கோவை கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை :

    உடுமலை ஸ்கூல் ஆப் கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஸ்ரீ ஹரி நாராயணா திருமணமண்டபத்தில் நடந்தது.பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், குற்றவியல் மாஜிஸ்திரேட் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கராத்தே பயிற்சியாளர் அருள்குமார் வரவேற்றார். போட்டியை, நகராட்சித்தலைவர் மத்தீன், டி.ஆர்.ஓ., ஜஸ்வந்த்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்படி 10 முதல் 11 வயது மாணவிகள் சண்டை பிரிவில் ஜெய்சாய்ஸ்ரீ முதலிடம், அக்சயா இரண்டாமிடம், ஹர்சாஸ்ரீ மூன்றாமிடம் வென்றனர்.இதேபோல 11 வயது மாணவர் சண்டைப்பிரிவில் ஜெய்ஆதித்யா முதலிடம், அஸ்வின்ராஜ் இரண்டாமிடம், அபிேஷக் மூன்றாமிடம் பெற்றனர். குறிப்பாக, கோவை ஹாயாஷிகா கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.வக்கீல் சிதம்பரசாமி, செவ்வேல், டாக்டர் வாசுதேவன், உடுமலை ராயல்ஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் யோகானந்த், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.
    • பரதநாட்டியம், கர்நாடக இசைகச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டல அளவிலான யோகாசன போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்ப ந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி நிர்வாக செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து பரதநா ட்டியம், கர்நாடக இசை கச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற திருஞானசம்பந்தர் பள்ளி மாணவமாணவிகள் சக்கராசனம்,அர்த்தபா தாசனம், மயூராசனம் உள்ளிட்ட யோகாச னங்களை செய்துகாட்டினர். அவர்களுக்கு தருமபுர ஆதீனம் பரிசு கோப்பை வழங்கி ஆசி கூறினார்.

    • குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.
    • முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 5-ந் தேதி முதல் சாரல் திருவிழா தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    சாரல் திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று உணவு கலை நிபுணர் பழனி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.

    இப்போட்டியில் சுமார் 14 குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களது வீட்டிலேயே பாரம்பரிய உணவுகளான வேர்க்கடலை லட்டு, பொரி அரிசி குழம்பு, வெந்தயக் கலி, ஆடி கும்மாயம், நெல் சோறு, தினை சாக்கோ பால்ஸ், பலாப்பழ மைசூர்பாக், கருப்பு கவுனி சாம்பார் சாதம், குறித்த பல்வேறு பாரம்பரிய உணவுகளை சமைத்தனர்.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டல் ட்ரிசில் சார்பாக முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 குடும்ப தாய்மார்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.500 க்கான கூப்பனையும் வழங்கினார்கள். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, பழனி முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதனையடுத்து பளுதூக்கு தல் போட்டி, ஆணழகன் போட்டி மற்றும் யோகா போட்டி மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டது.

    அதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.

    வலு தூக்குதல் போட்டியில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு என்று 9 பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்பு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் பார்வை யாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். 

    • வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி உள்பட பலர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ''பாரதி இளங்கவிஞர் விருது'' க்கான கவிதை போட்டி நடந்தது. இதில் 25 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிக்கான தலைப்பு மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ''நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'' என்ற தலைப்பில் 50 வரிகளுக்கு மிகாமல் மாணவர்கள் கவிதை எழுதினர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கிஷோர் தமிழ்த்துறை சார்பில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்றார். அவர் தனது கவிதையில் பஞ்சம், லஞ்சம், இயற்கை சீரழிவு போன்ற சமூக சாடல்கள் இடம் பெற்றன.

    இவரை பாராட்டி பி.எஸ்.ஆர். கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுரேஷ் பரிசு வழங்கினார். பரிசு பெற்ற மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
    • பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசினையும், ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசினையும், திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விசுவநாதன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு ஆஸ்பயர் அகாடமியின் நிறுவனர் பரணிதரன் தலைமை தாங்கினார். நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். நாளை அமைப்பின்ஒருங்கி ணைப்பாளர் செகுரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    • பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் கார்த்திகேயன், கமலேஷ், மாணவி சுஷ்மிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    தென்காசி:

    பள்ளிக்கல்வித்துறை, வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் இணைந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வினை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் எழுதுதல், பேச்சுப்போட்டி தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடத்தப்பட்டது. இதில் 310 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். ரோட்டரியன் லெட்சுநாராயணன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் மாரிமுத்து, செயலாளர் ரமேஷ் விழா பேரூரை ஆற்றினர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மின்வாரிய செயற்பொறியாளர்அருள் வாழ்த்துரை வழங்கினர். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

    ஓவியப்போட்டியில் பண்பொழி ஆர்.கே.வி. நடுநிலைப் பள்ளி மாணவன் கார்த்திகேயன் முதல்பரிசும், தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவன் கமலேஷ் இரண்டாம் பரிசும், தென்காசி இசக்கி வித்யாரம் பள்ளி மாணவி ஏ.சுஷ்மிதா மூன்றாம் பரிசும், கட்டுரைப்போட்டியில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரி முதல் பரிசும், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவிஷா இரண்டாம் பரிசும், இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவி கங்காலெட்சுமி மூன்றாம்பரிசும், ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் ஜீவிகா முதல் பரிசும், தீபிகா இரண்டாம் பரிசும், அனுபாரதி மூன்றாம் பரிசும், பேச்சுப்போட்டியில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி மாணவி ராபிகா, இல்லம்தேடிகல்வி தன்னார்வலர் நல்லமங்கை ஆகியோர் பரிசு பெற்றனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
    • ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்ததுடன் அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனப்பி வைத்தனர். அந்த வகையில் 3 ஆயிரம் ஓவியங்கள் அனுப்பி வைக் கப்பட்டன.

    இந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த கமிட்டி தேர்வு செய்த சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளம் புனித மிக்கேல் ஆங்கில பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளையும், மன்ற செயலாளர் செல்வசேகர் மெடல்களையும், மன்ற பொருளாளர் தேவதிரவியம் சான்றிதழையும் வழங்கினர்.

    விழாவில் மன்ற துணை செயலாளர் நீக்குலாஸ், துணை தலைவர் வில்சன் மற்றும் ராஜன், பேட்ரிக், பாக்கியம், ஆலோசனை மரியான், ராஜேந்திரன் மற்றும் காமராஜர் நற்பணிமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
    • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் காமராஜர் 120 -வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் செங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முடிவில் ஆசிரியர் துரைராஜ் நன்றி கூறினார்.

    • புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.

    கரூர்:

    கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரா.வைரப்பெருமாள் 52ம் ஆண்டு நினைவு புறா போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. சாதா புறா போட்டியை கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை தலைவரும், நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான வை.நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் 15 புறாக்கள் பங்கேற்றன. புறாக்கள் குறைந்தப்பட்சம் 6 மணி நேரம் பறக்கவே ண்டும். குறிப்பிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதிகள் கடை பிடிக்கப்பட்டன. போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். முதல் நாள் போட்டியில் 6 மணி நேரம் பறந்த புறாக்கள் 2வது நாளிலும் அன்றும் 6 மணி நேரத்திற்கு மேல் பறக்கும் புறாக்கள் 3வது நாள் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கும். நடுவர்களாக எஸ்.அரங்கராஜ் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர்.

    கர்ணப்புறா போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற புறாக்களுக்கு முதல் பரிசு தலா ரூ.13,001, 2ம் பரிசு தலா ரூ.10,000, 3ம் பரிசு ரூ.7,000, 4ம் பரிசு ரூ.4,000 வழங்கப்படுகிறது.

    • பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
    • முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு

    அரியலூர்:

    தமிழ்நாடு நாள் விழா வருகிற 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேற்கண்ட போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி துறை மாவட்ட உதவி இயக்குநர் சித்ரா தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இதில், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாண, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் 31 பேரும், கட்டுரை போட்டியில் 29 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில், பேச்சு போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி சுஜீதா முதல் இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் இப்ராஹிம் 3-வது இடத்தையும், பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சுகுணா 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.

    கட்டுரை போட்டியில் கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி அர்ச்சனா முதல் இடத்தையும், கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி குணசுந்தரி 2-ம் இடத்தையும், மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி ஜெயதிரிஷா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விரைவில் வழங்கவுள்ளார். இதனிடையே பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ×