search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு விழா நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் நிறுவனர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.

    தட்டான்குட்டை ஊராட்சித் தலைவி புஷ்பா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதேபோல, புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வத்தின் தந்தை பழனி சுதந்திர போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்
    • கலெக்டரிடமும் வாழ்த்து பெற்றனர்

    கரூர்:

    காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காச நோய் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவில் காசநோய் கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருவதுடன் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறது.

    அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மருத்துவர் அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைந்து உள்ளது. இதனை பாராட்டும் வகையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கரூர் மாவட்ட காசநோய் பிரிவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரை, கரூர் மாவட்ட காசநோய் குழு சந்தித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, இனிவரும் காலங்களில் மருத்துவர் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைத்து காசநோய் இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்றார்.

    • காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினமான ஜூலை 15-ந்தேதி ஆண்டுதோறும் கல்வித்திருவிழாவாக நாடார் மஹாஜன சங்கம் கொண்டாடி வருகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அரசு, அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. இதில் பட்டிமன்ற புகழ் அவனி மாடசாமி, மதுரை பிரமுகர் சக்தி செல்வம், நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் மோகன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன பொறுப்பாளர்கள் பெரியகருப்பன், சேது, பரம்பை மயில்நேசமூர்த்தி, வேதாளை முருகேசன், குஞ்சார்வலசை ஜெயக்குமார், வட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கு கொண்டனர். தேர்வான மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுசும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வடமலையான் மருத்துவமனை, என்.எம்.எஸ். கல்வி வழிகாட்டி அகாடமி ஆகியவை இணைந்து சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    • அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    வீராணம் அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகம்மது ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இருதாலய மருதப்ப பாண்டியன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு தலைவர் திவ்யா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜர்னாஸ் ஜான், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மைதீன் நிஷா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியன், வீரபுத்திரன், அப்துல் காதர், முஸ்தபா கமால், பாலமுருகன், சதாம் உசேன், அன்சார் அலி உட்பட ஏராளமான பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பார்வையாளர் தேர்வு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 44-வது ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக 15 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் உள்ள விளை யாட்டு அரங்கில் தேர்வுப் போட்டிகள் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் போட்டியினை தொடங்கி வைத்தார். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 40 மாண வர்கள், 60 மாணவிகள் உள்பட மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர் தொழிலதிபர் சண்முகசுந்தரம் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், ராமநாதபுரம் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய், முதன்மை ஆர்பிட்டர் அதுலன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாணவர் பிரிவில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் ரக்சன், மாணவிகள் பிரிவில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி மிர்துலா ஆகியோர் முதலி டம் பெற்றனர்.ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வரும் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அகில இந்திய சதுரங்க கழகம், உலக சதுரங்க கழகம் அனுமதியுடன் மாமல்லபுரத்தில் தமிழக அரசின் முழு நிதி உதவி யுடன், ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 189 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவி மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிடவும், சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முடிவில் மாவட்ட பொரு ளாளர் குணசேகரன் நன்றி கூறினார். போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் எப்ரேம் செய்திருந்தனர்.

    நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
    லக்னோ:

    விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.

    இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

    இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
    ×