என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 214608
நீங்கள் தேடியது "பூப்பல்லக்கு"
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழாவில் பக்தர்கள் விடிய விடிய சாமியை தரிசனம் செய்தனர்.
வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை தா்மராஜன்கோட்டையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை கோம்பை கரட்டில் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இங்கு 98-வது வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வைகாசி விசாகத்தன்று பாலாபிஷேகம் நடந்தது.
அதில் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கி பால்குடம் எடுத்து கோவிலை அடைந்தனா். அங்கு பாலதண்டாயுதபாணிசாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மறுநாள் பட்டுப்பல்லக்கில் சாமி எழுந்தருளி கோவிலிருந்து புறப்பட்டு கள்ளா் மடம் வந்து தங்கினார். பின்னர் அங்குள்ள வல்லபகணபதி திருக்கோவில் வளாகத்தில் வண்ணமலா்களால் அலங்காிக்கப்பட்டு மின்விளக்கு தோரணங்களுடன் கூடிய பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணிசாமி ராஜகிரீடம் அணிந்து, சிகப்பு பட்டு உடுத்தி எழுந்தருளி நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டார். வாடிப்பட்டி நகா் முழுவதும் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்களால் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
பூப்பல்லக்கு தாதம்பட்டி, நீரேத்தான், லாலாநகா், பேட்டைபுதூா், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசாமிகள் மடம் வழியாக பவனி வந்தது. அப்போது பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி நேற்று வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு கோவிலுக்கு சென்று சேர்ந்தார்.
இந்த திருவிழாவையொட்டி வாடிப்பட்டி நகா்முழுவதும், மதுரை-திண்டுக்கல் சாலையோர கடைகளில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில்ஆயிரக்கணக்காண பக்தா்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா். திருவிழாவில் தினமும் இரவு வீரப்பன்திடலில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள், கிராமிய தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை சொக்கையாசாமி பேரப்பிள்ளைகள், விழா கமிட்டியினா், சீா்பாதம் தாங்கிகள், கிராமப் பொதுமக்கள் செய்து இருந்தனா்.

×

X