search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215416"

    சட்டசபையை புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படி 500 கிடைக்காது.#TNassembly
    சென்னை:

    சட்டசபையில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு தினசரி ரூ.500 தினப்படி வழங்கப்படும்.

    சட்டசபை நடைபெறும் நாட்களில் லாபியில் வருகைப் பதிவேடு புத்தகம் வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த பதிவேட்டில் கையெழுத்திட்டால் எம்.எல்.ஏ.க் களுக்கு அன்றைய தினப்படியாக ரூ.500 வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பும் ஒருநாள் பின்பும் இந்த தினப்படி வழங்கப்படும்.

    பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் இந்த தினப்படி கிடைக்காது.

    அந்த வகையில் சட்ட சபைக்கு இன்று செல்லாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.500 தினப்படி கிடைக்காது. எத்தனை நாட்களுக்கு போகாமல் இருக்கிறார்களோ அதற்குரிய பணம் கிடைக்காது.

    ஏற்கனவே பஸ் ஊழியர்கள் பிரச்சினைக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து சட்ட சபையில் தி.மு.க. எம்.எல். ஏ.க்களுக்கு ரூ.55 ஆயிரம் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் பெற்று வருகிறார்கள்.

    இதுதவிர நிலுவைத் தொகை ரூ.4½ லட்சமும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படியும் இப்போது “கட்” ஆகிறது. #TNassembly
    ×