என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை பலி"
- குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.
அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காந்திவேல் குடிபோதையில் பைக்கை ஓட்டி உள்ளார்.
- உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் காந்திவேல் (வயது 25). இவர் தீபாவளி அன்று தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தை கபிலனுடன் எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் தனது ஊருக்குச் செல்வதற்காக தனது 1 வயது மகனை பைக்கில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.
அப்போது காந்திவேல் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் மயிலாப்பூர் அருகே வந்தபோது பைக்கில் இருந்து குழந்தை தவறி விழுந்து படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை குடிபோதையில் பைக் ஓட்டிய அலட்சியத்தால் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
- குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது29). இவருக்கு மதுஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு வீரபாண்டி கழுகுமலை அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருக்கவே வீரபாண்டி குழந்தையை கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக வீட்டில் தடல் புடலாக சமையல் செய்து கொண்டு இருந்தனர்.
- வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த சோமநாத் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிக்கனுர் அடுத்த எர்ரகோட்டாவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமேஸ்வரம்மா.
இவர்களது மகன் சோமநாத் (வயது 3). எமிக்னூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நாகராஜ் தனது மனைவி குழந்தையுடன் சென்று இருந்தார். உறவினர் வீட்டிற்கு சென்ற நாகராஜ் அவரது மனைவி குழந்தையை விளையாட விட்டு விட்டு அவரது உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக வீட்டில் தடல் புடலாக சமையல் செய்து கொண்டு இருந்தனர். வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த சோமநாத் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான்.
அப்போது சமையல் செய்பவர்கள் அடுப்பில் இருந்து கொதிக்க கொதிக்க அண்டாவில் சாம்பாரை கீழே இறக்கி வைத்துவிட்டு அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர். சோமநாத் எதிர்பாராத விதமாக அண்டாவில் இருந்த சாம்பாரில் விழுந்து அலறி துடித்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்து ஓடிய உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர் சிறுவனை மீட்டனர்.
அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுவன் இறந்ததால், உறவினர்களுடன் கலகலப்பாக இருந்த வீடு சோகமாக மாறியது.
- தான் வேலை செய்யும் இடத்திற்கு தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
- அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது25) . கூலி தொழிலாளி.
இவரது மனைவி பவித்ரா (21) குழந்தைகள் கனிஷ்காஸ்ரீ (4) ஹர்ஷிதாஸ்ரீ (1½). பவித்ரா நரசிங்கபுரம் அருகே சித்தைன்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பவித்ரா உட்பட 7 பெண்கள் அங்கு தேங்காயில் பருப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா தனது 2 பெண் குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதாஸ்ரீ குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 3வதாக கருவுற்ற கவிதாவிற்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
- பால் கொடுத்தபோது புரையேறியதால் குழந்தைக்கு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோவிந்தம்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கவிதா (வயது 24). இவர்களுக்கு சக்திவேல் (4) என்ற மகனும், சாய்ஸ்ரீ(3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் 3வதாக கருவுற்ற கவிதாவிற்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த குழந்தைக்கு படுத்துக் கொண்டிருந்தவாறே தாய்ப்பால் கொடுத்த கவிதா அதன் பிறகு குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தையின் காதிலும், மூக்கிலும் பால் வெளியேறி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது.
இதனால் பதறிப்போன கவிதா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்து சென்றார். ஆனால் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு பால் கொடுத்தபோது புரையேறியதால் அது இறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
- ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரி தெற்குதெருவை சேர்ந்தவர் லிங்கராஜ். இவருக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக குழந்தைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்தார்.
- எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் அந்த குழந்தை தவறி விழுந்து இறந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளன.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையின் பெரியப்பா சண்முகம் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை கவனித்து வந்தனர். நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர்.
- குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், வியாபாரிகள் சங்க நிர்வாகி. இவரது மனைவி தேவகி. இவர்களது மகன் இளமாறன் (வயது1).
நேற்று முன்தினம் இரவு தேவகி சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இளமாறன் திடீரென மாயமாகிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகி தேடிய போது கழிவறையில் உள்ள தண்ணீர் வாளிக்குள் குழந்தை இளமாறன் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு தேவகி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இளமாறன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார் குழந்தை இளமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தாயுடன் அக்காவை அழைத்து வர சென்ற போது பரிதாபம்
- டிரைவர் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, மகள்கள் பிரிஸ்திகா, ஜெயஷ்டிகா (வயது 2).
மூத்த மகள் பிரிஸ்திகா தேவிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே வேன் நின்றதும் அவரது தாயார் கல்பனா பிரிஸ்திகாவை அழைத்து வர சென்றார். அப்போது தனது அக்காவை பார்ப்பதற்காக தாயை பின் தொடர்ந்து ஜெயஸ்டிஸ்கா ஓடினாள் . கல்பனா வேனின் பின்பக்கமாக சென்று மூத்த மகளை எடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் வேனின் முன்பக்கமாக 2 வயது குழந்தை ஜெயஸ்டிகா ஓடியது. இதனை அறியாமல் டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனால் வேன் சக்கரத்தில் ஜெயஸ்டிகா சிக்கினாள். இதனை கண்டு கல்பனா அலறி கூச்சலிட்டார்.
வேனில் சிக்கிய ஜெயஸ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அவர் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.
- உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
- ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,
குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.
கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.
- காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரி:
சென்னையை அடுத்த பழவேற்காடு லைட்அவுஸ் குப்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று காய்ச்சல், வாந்தி-பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய மருந்து இல்லை என்று கூறி குழந்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி பழவேற்காடு, பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.