search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • பூசாரிப்பட்டி -சீலக்காம்பட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மோட்டார் சைக்கிள் இருந்த கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    கோவை:

    புதுக்கோட்டை மாவட்டம் பானைபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மதுரையை சேர்ந்த பசும்பொன் என்பவரது மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் கோமங்கலம் அருகே உள்ள பூசாரிப்பட்டி -சீலக்காம்பட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் இருந்த கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சேலம் கந்தம்பட்டியில் லாரி டிரைவர் திடீர் பலியானார்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மைசூர் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50). இவர் கர்நாடகாவில் இருந்து லாரியை ஓட்டி வந்தார் நேற்று இரவு அந்த லாரி சேலம் கந்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது லாரியை நிறுத்தி விட்டு குளிப்பதற்காக சென்றார் .

    அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.
    • கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது.

    ஊட்டி;

    தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக சரக்கு லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூரில் இருந்து வெளிமாநிலத்துக்கு செல்வதற்காக சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. தொரப்பள்ளி அருகே லாரியின் செயல்பாட்டை டிரைவர் பரிசோதித்தார். தொடர்ந்து லாரியை திருப்ப முயற்சி செய்தார். அப்போது கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து லாரியை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

    இருப்பினும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் போலீசார் வராததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து பழுதான லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் 1 மணி நேர முயற்சிக்குப்பிறகு பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் லாரி எடுக்கப்பட்டு, போக்குவரத்து சீரானது.

    • திருடனை போலீசார் திருப்பூரில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.

    கோவை:

    கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மதுசெனை (வயது 38). இவர் பழைய பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த அங்கமுத்து என்பவர் லாரி டிரைவராக வேலை செய்த வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். அப்போது அவருடன் வேலை செய்யும் மற்றோரு லாரி டிரைவர் சுரேஷ் என்பவர் அங்கமுத்துவிற்கு போன் செய்து லாரியின் ஜி.பி.எஸ் திருப்பூரில் காட்டுகிறது. எங்கே செல்கீறிர்கள் என கேட்டார்.

    அதற்கு அங்கமுத்து நான் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறி வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது தான் அவருக்கு லாரி திருட்டு ேபானது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது உரிமையாளர் மதுசெனையிடம் தெரிவித்தார். அவர் உடனே ஆனைமலை வந்து போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி குறித்து திருப்பூர் குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்து லாரியையும், லாரியை திருடி வந்த வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் லாரி மற்றும் திருடனை ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரியை திருடியது ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி திருட்டு போன ஒரே நாளில் போலீசாரை லாரியை பறிமுதல் செய்து திருடனை கைது செய்தது பொதுமக்கள் பாராட்டினர்.

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Karimnagaraccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று வராங்கல் மாவட்டத்திலிருந்து கரீம்நகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள செங்கர்லா கிராமத்திற்கு அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனஉறுதியளித்தார். #Karimnagaraccident
    ×