search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோயாளிகள்"

    காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், காசநோய் தடுப்புத் திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர், தனியார் மருத்துவ நிர்வாகத்தினர், மருந்தாளுனர் சங்கம், ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க, காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஆய்வகத்தினர், மருந்தாளுனர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

    பரிசோதனை மூலம் நோயாளிக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு நோயாளிகளை அனுப்பி வைக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையம் மற்றும் மருந்தாளுனர் ஆகியோருக்கு அரசு சார்பில் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மாதந்தோறும் ரூ.500 உதவி தொகை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.
    ×