search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாறு"

    • தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்ப கத்தின் கிளை அலுவலகம் மதுரையில் இயங்கி வருகிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொன்மையான மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீ கத்தை அடையாளமாகக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை தனிநபர், தனியார் நிறு வனங்கள். மடங்கள், சர்ச், மசூதி ஆகியோரிடம் பெற்று பாதுகாத்து வருகிறது.

    தற்போது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இச்சமுதாயத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் Computer / Internet Scanning / Digitization முறையில் பதிவு செய்து அதன் விவரங்களை அனைத்து ஊடகங்க ளுக்கும், புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் தெரியப்படுத்த உள்ளது.

    எனவே பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வர லாற்று ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அல்லது ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக்காப்பகம், எண். 9 பழைய இராமநாத புர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை-20 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும். மேலும் தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ- மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
    • தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்தும் 14-வது ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பெண்கள் செயற்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை தாங்கினார்.

    தமிழக பெண்கள் செயற்களம் அமைப்பாளர் மங்கைநம்பி மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பெண்கள் செய ற்களம் செயற்குழு உறுப்பினர் சாரதா,

    தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகி யுவராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழர் வரலாறு, தொன்மை குறித்த புத்தகத்தில் வினா, விடை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊக்கத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நா.மு வேங்கடசாமி நாட்டார் கல்லூரி இயக்குனர் விடுதலை வேந்தன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகிகள் சீர்த்தி,வெண்ணிலா, தாமரை ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு, தமிழர் மரபு மற்றும் உணவு வகைகள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களுடைய இசைக்கருவிகள், சிலம்பம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகள், தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள், நாட்டுப்புறக்கலைகள், இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள், தமிழர்க ளின் தொன்மையான இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெ ற்றது.

    இன்று 2-வது நாளாக கண்காட்சி நடைபெற்றது. ஏராளமானோர்பார்வை யிட்டனர். இந்த கண்காட்சி யானது நாளை வரை நடைபெறுகிறது.

    • கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும்
    • 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழா குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப் பட்டுள்ளது.

    தொலைக்காட்சியில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்டதிருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார். அய்யப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண் ணன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரு கின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வர லாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியா ளர்கள் 3 பேரை சுற்றுலா வழி காட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    • புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம்.
    • பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    திருப்பூர் :

    தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விவரிக்க ஏதுவாக திருப்பூர் ஆண்டிபாளையம் மண்டலம் பா.ஜ.க. சார்பில், 'கதாகாலட்சேபம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கோவில்களில் திருவிழாக்களில், கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை கொண்டு மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம். கிராமிய இசைக்கலைக்கு உயிர்கொடுத்து தியாகிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    எழுச்சியூட்டும் சர்வமத பாடல்களுடன் துவங்கிய கதாகாலட்சேபம், தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விளக்கியும், அவரது பாடல்களை பாடியும் காண்போரை கட்டிப்போட்டது.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை விளக்கும் பாடல்களும், இடையிடையே, ஆடல்பாடலுடன் நிகழ்ந்தது.சினிமா பாடல்களுடன் கலை நிகழ்ச்சி நடத்தும் நிலையில் இருந்து மாறி, பாரம்பரியமான கதாகாலட்சேபம் என்ற பெயரில், சுதந்திர போராட்ட வரலாறுகளை காட்சிகளாகவும், நரம்புகளை முறுக்கேற்றிய பாடல்களாகவும் விளக்கியது திருப்பூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

    • தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள். பணியாளர்கள். மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்க ளிலும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 01.07.2022 அன்று புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல் நிலைப்பள்ளி. திறந்தவெளி கலையரங்கில் பள்ளி மாணவியர்கள் ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியினையும், நாகர்கோவில், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும், தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    லூர்தம்மாள் சைமன் பாலத்திலும், நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்திலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்துறையின் சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் எதிர்கால தலை முறையினர்களான மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் நிகழ்ச்சிகள், அலு வலர்கள் மற்றும் பணியாளர் களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருவாய் துறையின் சார்பில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளும், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளின் வாயிலாக பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் 15வது நாளான இன்று அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் நோக்கமே வருங்கால இளைய தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் உட்பட நாம் அனைவரும் நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், சுதந்திர போராட்ட வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மாட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
    • சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வரை நடக்கி றது. இதனை தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நி லைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார்.

    இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளர்கள் பழனிவேல் (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் அறிவியல், வரலாறு, இலக்கி யம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர்.

    பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர். ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    சிலபேர் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாகவும் ஆனால் அவர்கள் அதில் தோற்றுப்போவார்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார். #HamidAnsari
    டெல்லி:

    டெல்லியில் ‘டைம் மிசின்’ என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஹமீது அன்சாரி பேசும் போது:-

    வரலாறு என்பது வரலாறு மட்டுமே. அதனை படிக்கலாம். நீங்கள் அதிலிருந்து பாடங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதனை மாற்ற முடியாது. சிலர் வரலாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அம்முயற்சியில் தோற்றுப்போவார்கள். ஏனெனில் வரலாறு என்பது மாற்ற முடியாதது 

    என அன்சாரி பேசினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஹமீது அன்சாரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×