என் மலர்
நீங்கள் தேடியது "பல்கலைக்கழகம்"
- ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவை ஏற்க மறுத்தன.
- "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் தெரிவித்தார்.
30 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI என்ற அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் சாக் யாதேகரி (Zach Yadegari) (18 வயது). பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.
சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை செயலி காண்பிக்கும்.

இளம் வயதில் உயரிய பொறுப்புடனும் மில்லியனர் ஆகவும் வளம் வருகிறார். மாதத்திற்கு 2 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்தார்.
- ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
- அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பரமக்குடி
பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.
மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
- நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
- திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.
குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
- தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்
சென்னை:
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.
கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
- 291 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
- தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11 ஆயிரத்து 451 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலை நிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க ப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டு களில் படித்தவர்க ளுக்கு பட்டங்கள் தற்போது வழங்க ப்பட உள்ளது.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு கவர்னரும் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கு பட்ட ங்களை வழங்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு பட்டங்கள் வழங்க ப்பட உள்ளது.
இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லை க்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசே ஷய்யன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை பல்க லைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர்.
- மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருச்கிறது.
புது டெல்லி:
டெல்லியில் ஜவகர்லால் நேருபல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று இரவு பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர். ஒரு மாணவிக்கு அந்த கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே மர்ம கும்பல் தப்பி சென்று விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அபிஷேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளி வாகனங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு 29-வது இடம் வகிக்கிறது.
- பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
புதுடெல்லி கல்வி அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான பல்கலை கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29-வது இடம் பிடித்துள்ளது.
மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி தேசிய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 36-வது இடத்தையும், தேசிய அளவிலான அனைத்து பிரிவு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 48-வது இடத்தையும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீதரன், இணை வேந்தா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் சசிஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் மற்றும் பதிவாளா் ஆகியோர் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.
- பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
- பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை:
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன. நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பு என்ற நிலையிலேயே இந்த பணியிடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கி உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
- உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
- தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார்.
சென்னை:
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொன்மையும், பாரம்பரியமும் மிக்க "சென்னை பல்கலைக்கழகத்தின்" கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்படமாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி மொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.
ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
மதுரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
"தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.
மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.