search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217482"

    • மது அருந்திய நிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் வலியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 61), தொழிலாளி.

    இவர், தினமும் மது அருந்தி விட்டு உப்புக்குளம் பகுதியில் உள்ள கிணற்று அருகே அமர்ந்திருப்பது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக இவர் திடீரென மாயமானார். உறவினர்கள் தேடியபோது கிணற்றுக்குள் ஜாண்சன் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.

    அவர், மது அருந்தியநிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மீட்புப்பணி வீரர்கள் புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் திவான்மைதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஊர் பொதுமக்களால் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் மீட்புப்பணி வீரர்கள் செல்வம், சந்திரமோகன், செந்தில்குமார், சிவக்குமார், ராஜா, கோமதி சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    • கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரபட்டி பஞ்சாயத்து குறும்பலாப்பேரி 7வது வார்டு உலகாசிபுரத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவரின் வீட்டின் முன்பு பாழடைந்த பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இதனை பலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதாலும் இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் பாழடைந்த கிணறு முழுவதும் நீர் நிரம்பி விடுவதால் கிணற்றின் அருகே செல்லும் பாதையை தினமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வரும் சூழ்நிலை இருப்பதால் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பலமுறை குலசேகரபட்டி பஞ்சாயத்து மற்றும் கீழப்பாவூர் யூனியனிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    பாழடைந்த கிணறு முழுமையாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
    • தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் அண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(81). இவரது வீட்டின் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதடைந்தது. இதனையடுத்து நேற்று டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை அனுப்பர்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(43). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக ராஜ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் விஷம் குடித்தார்.

    இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுமி பலியானார்.
    • பல மணி நேர போராட்டத்திற்கு பின் யாசிகாவின் உடல் மீட்க்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யாசிகா(வயது8).இவர் ஆலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மருதுபாண்டி பட்டூரில் உள்ள தனியார் தோப்பில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அங்கு சென்ற யாசிகா விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனை யாரும் பார்க்கவில்லை.

    இந்த நிலையில் சிறுமி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்த மருதுபாண்டி மற்றும் குடும்பத்தினர் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாருக்கும், மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியை தேடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் யாசிகாவின் உடல் மீட்க்கப்பட்டது. உடலை கைப்பற்றிய மேலவளவு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மு்னனதாக சிறுமியின் உடலை பார்த்து பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.


    இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage

    ×