search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர்"

    • எங்களுக்கு சசிகலா, தினகரன் பெரிதல்ல, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே குறிக்கோள் என்று முன்னாள் அமைச்சர் பேசியுள்ளார்.
    • அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விடுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் அவர் கூறியதாவது:-

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பி த்துள்ளார். அதன்படி வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை ஒவ்வொருவரும் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கொடிகளை கொடுத்து வருகிறோம்.

    கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடுகளில் விளக்கேற்றும் படி கூறினார். அதனை ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் செய்து காட்டினான். அதுபோல இப்பொழுது தேசிய கொடியை பறக்க விடும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அ.தி.மு.க.வில் பிளவு இல்லை. சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிதாக கட்சியில் சேதம் இல்லை. தினகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கருத்துக்களை பேசி வருகிறார். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. சசிகலா, தினகரன் போன்றவர்கள் கூறும் கருத்துகள் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை யில்லை. அது எங்களுக்கு பெரிதல்ல.எங்களது ஒரே நோக்கமே மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

    தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கி றார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களிடம் எப்படி ஓட்டு கேட்பார்? எனவே அ.தி.மு.க. வெற்றி உறுதியாகிவிட்டது.

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூறினாலும் திருவாசகமாக சொல்லுவார். அதுபோல இனிமேல் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சொல்லி விட்டார். எனவே கவர்னரை ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி எதுவும் பேசத்தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைனிக் பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
    • முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளி (ராணுவப்பள்ளி) உள்ளது. இந்த பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார். அன்று மாலை திருமூர்த்தி மலை செல்லும் முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மறுநாள் சைனிக் பள்ளி விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். விழா நடைபெறும் இடம் மற்றும் ஆடிட்டோரியத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது கலெக்டர் வினீத், எஸ்.பி சசாங்சாய், சப் கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம். எல்.ஏ., ஜெய ராமகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மொடக்கப்பட்டி ரவி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், துணை தலைவர் சண்முகவடிவேலு, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்அணி கிரிகதிரேசன், பொறியாளர் அணி துணைத் தலைவர் மொடக்குப்பட்டி பாபு மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை, சைனிக் பள்ளி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர்.
    • முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் வருகிற 16-ந்நதேதி நடைபெறும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடுமலை வருகிறார்.

    முதல்வரின் வருகையை ஒட்டி உடுமலை நகரை தூய்மை நகரமாக்க நகராட்சி பணியாளர்கள் சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். மேலும் உடுமலையில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கவர்னர் உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் நேற்று மற்றும் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    வன்முறை மேலும் பரவாமல் இருக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மொபைல் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து முதல்வர் பிப்லப் குமார் தேப் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தார். #BiplabKumarDeb
    அகர்தலா:

    வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. திரிபுரா மாநிலத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மோகன்புரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பிப்லப் குமார் தேப் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், சீரமைப்பு பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளம் புகுந்த தெருக்களில் உள்ள நீரில் இறங்கி அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வராக பதவியேற்றதில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BiplabKumarDeb

    ×