என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 217757
நீங்கள் தேடியது "தென்ஆப்ரிக்கா"
தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார்.
2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.
தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.
டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X