search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்"

    • தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் அவதூறாக பேசி யதுடன் கத்தியால் குத்தினார். காயமடைந்த சையது அப்துல் கபூர் இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தி.மு.க பிரமுகர் சைவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
    • இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

    சேலம்:

    சேலம்-விருத்தாசலம் ரெயில்வே மார்க்கத்தில் உள்ள காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் மின்னாம்பள்ளி அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவிபாரதி (வயது 24) என்று தெரிய வந்தது. சேலம் 4 ரோட்டில் உள்ள காளான் கடையில் இவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், அதிகாலையில் அவ்வழியே வந்த விருத்தாச்சலம் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    தற்கொலை செய்த கவிபாரதி 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் 'நான் எனது கிருஷ்ணனை பார்க்க செல்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி யாரும் வேதனைப்பட வேண்டாம். பக்தியால் முக்தியடைய நினைத்தேன். நிறைய நாள் ஆகும் போல இருக்கு. அதனால் தான், இந்த வழியை முடிவு செய்தேன், என குறிப்பிட்டு ஸ்ரீ ராம ராம என பாடலை எழுதியுள்ளார்.

    அரசாங்கத்திற்கு என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில், எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டுகொள்கிறேன். எனது குடும்ப மிகவும் வறுமையிலும், கடன் தொலையிலும் மிக மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது, என்றும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கவிபாரதி உடல்நிலை சரியில்லாத தனது தாய், தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால், இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இந்த நிலையில் இவர் மது பழக்கத்திற்கு அடிமை யானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்.

    உறவினர்கள் அதுகுறித்து விசாரித்த போது தடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லையாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரது மகன் வளர்ந்த பெருமான். இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தங்கியிருந்து பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு பலூன் விற்க சென்றனர். அப்போது கோவில் அருகே வளர்ந்த பெருமாள் மயங்கி கிடப்பதாக செல்லையாவுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வளர்ந்த பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    • வனத்துறை ஊழியரின் பைக் திருடப்பட்டது.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி,
    வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோ ட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோ ட்டார் சைக்கி ளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன.

    இது குறித்த புகாரின் பேரில் காடு பட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    • இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வெற்றிலை ஊரணி மேலத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 43), பட்டாசு ஆலை ஊழியர். இவர் இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார். காலையில் சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி அவரது மனைவி ஜோதி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இவரது மனைவி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெஞ்சிதா (27). இவர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதியதாக வீடு ஒன்று கட்டினார். இதற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் மன முடைந்த நிலை யில் அவர் இருந்து வந்தார்.

    இந்த நிலை யில் நேற்று சதீஷ் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையின் போது சதீஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாநில செயலாளர் சிவபழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் காந்திராஜீ தலைமை தாங்கினார்.

    செயலாளர் அந்தோணிராஜ் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியாண்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகி சீராளன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் பேசினர்.

    கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் நிறைவுரை ஆற்றினார்.

    அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார். செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிப்பதாக கூறி அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
    • இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 400 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாத்திரை வாங்க வந்த முதியவர் ஒருவரிடம், ஆஸ்பத்திரி ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் என்னால் நடக்க முடியவில்லை, கால்கள் நடுங்குகின்றன, எவ்வளவு முறை வர முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே அனுப்பினார். இந்த காட்சியை, அங்கு நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

    • பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது.
    • இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    சேலம்:

    ஏற்காடு அடிவாரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் (பங்க்) நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவரது விற்பனை நிலையத்தில் அய்யன் திருமாளிகை பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (25) கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கில் இருந்து தனியாக பம்பு வைத்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்த ராஜேந்திரனுக்கு சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்தும் ராஜேந்திரன் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து முத்துசெட்டிபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சக்திகுமார்(வயது 30) .ஜவுளி கடையில வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (25). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த சக்திகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அவினாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ×