search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்ட்"

    • சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் வேல்விநாயகம்.
    • வேல்விநாயகம் போதை பொருட்கள் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் மூலமே, சேலம் மாநகரில் அதன் விநியோகம் நடப்பதாகவும் புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை மீறி விற்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் போதை பொருட்கள் பறிமுதல் வேட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கியவர்கள், விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் வேல்விநாயகம் (வயது 32). இவர் போதை பொருட்கள் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் மூலமே, சேலம் மாநகரில் அதன் விநியோகம் நடப்பதாகவும் புகார் எழுந்தது.

    இது குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அழைத்து எச்சரித்து கமிஷனர் அனுப்பி வைத்தார். இருப்பினும் போலீஸ்காரர் வேல்விநாயகம் போதை பொருட்கள் கும்பலுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்.

    இதை அறிந்த போலீஸ் கமிஷனர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கான நகல் வேல்விநாயகத்திடம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமூக நலத்துறை நடவடிக்கை.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர், ராணிப்பேட்டையில் உள்ள ஆண்கள் அரசு பள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்தது.

    • அமைச்சருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.
    • மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 7 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதையொட்டி மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வாழப்பாடி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

    ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    மரக்காணம் அருகே எம்.திருக்கனூரை சேர்ந்தவர் பரமசிவம். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் லட்சுமி வி‌ஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

    இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர் பிரேத பரிசோதனை செய்ய ரூ. 1500 லஞ்சம் வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் பணத்தை கொடுத்து அவரது உடலை வாங்கி சென்றதாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், லட்சுமியின் உறவினர்களிடம் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகமூடி அணிந்தபடி பணத்தை பெற்று செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய ஊழியரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
    ×