search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பெண்"

    • 100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

    100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

    அம்மாநிலத்தில் நிறைய மாணவர்கள் 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் திணறுவதால் தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்கு பிறகு கல்வியை கைவிடுகிறனர். எனவே மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.

    இதை சரிசெய்யும் வகையில் 10 ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20ஆகக் குறைக்க மகாராஷ்டிர பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் இதன்படி அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது.

    கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளையே உயர்கல்வியில் அவர்கள் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     

    • மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
    • பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.

    மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது. 

     

    'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
    • செல் போன்களின் பயன்கள் என்ன? என்பது கேள்வி

    மனிதர்கள் மீது ஏகபோகமாக ஆதிக்கம் செய்யும் மொபைல் போன்கள் உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாகவே மாறியுள்ளது. அத்தகு மொபைல் போன்களின் பயன்கள் குறித்து பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் அளித்துள்ள விளக்கம் இணையதில் வைரலாகி வருகிறது. இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.

    கேள்வி:

    செல் போன்களின் பயன்கள் என்ன?

    பதில்:

    போன் இல்லையென்றால் மனநிலை [MOOD] நன்றாக இருக்காது, MOOD இல்லையென்றால் படிக்கத் தோன்றாது, படிக்காமல் வேலை கிடைக்காது, வேலை இல்லையென்றால் பணம் இருக்காது, பணம் இல்லையென்றால் சாப்பாடு கிடையாது, சாப்பிடாமல் உடல் எடை குறையும், அதனால் உருவத்தில் மாற்றம் ஏற்படும். உருவம் நன்றாக இல்லையென்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள், யாரும் விரும்பவில்லையென்றால் கல்யாணம் நடக்காது, கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம், தனிமையாக இருப்பதால் கவலை ஏற்படும், கவலை மன அழுத்தமாக மாறும், மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியும் மரணம் ஏற்படும்.

     

    • நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை.
    • இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    புதுடெல்லி:

    நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சா்ச்சையானது.

    'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது' என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

    இதை மறுத்த என்.டி.ஏ., 'என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப் பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப் பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யப்படும் என என்.டி.ஏ. நேற்று அறிவித்தது.

    இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் என்.டி.ஏ. தலைவா் சுபோத் குமாா் சிங் கூறியதாவது:-

    நீட் தோ்வு எழுதியவா்க ளில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் தோ்வாணைய (யு.பி.எஸ்.சி.) முன்னாள் தலைவா் தலைமையில் 4 போ் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

    கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, தோ்வின் தோ்ச்சிக்கான மதிப்பெண்ணில் எந்தவித தாக்கத்தை யும் ஏற்படுத்த வில்லை. மேலும், தோ்வு முடிவுகள் மறு ஆய்வு, இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு தோ்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், "உயா்நிலைக் குழுவிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம். என்றாலும் நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை" என்றாா். மேலும், நீட் வினாத்தாள் கசிந்தது தொடா்பான புகாரை அவா் மறுத்தாா்.

    • குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பாப்பா. இவர்களது 2-வது மகன் தமிழ்ச்செல்வன்.

    2 கை மற்றும் கால்கள் ஆகியவை போலியோவால் பாதிக்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் போன்று செயல்படும் நிலை இல்லாமல் இருந்து வருகிறார். பிறவியிலேயே இந்த பாதிப்பு இருந்தாலும் படிப்பு ஒன்று தான் முக்கியம் என அவர் கருதியதால் அவரது பெற்றோர் அவருக்கு கல்வியை கற்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவன் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவன் தமிழ்ச்செல்வன் மொத்தமாக 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாணவர் கூறும் போது, தொடர்ந்து படித்து சிறந்த வக்கீலாக வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார்.

    ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியை கண்ணாக கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கமுதி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
    • பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.

    இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.

    அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.

    வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.

    இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது. 

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    • 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 9, 10-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
    • அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளி நடைபெறு கிறது. இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கை என்பது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாண விகளின் கல்வித் திறன் அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளிக்கு அனுமதிக்கப் படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 11,12 ஆகிய வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

    9,10-ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9,10 ஆகிய வகுப்புகளின் படித்து சிறப்பும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 80 பேர் தேர்வு செய்யப்பட்டு இது குறித்து அந்த மாணவர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்க ளுடன் பள்ளிக்கு வந்து விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்க ளிடம் கொடுத்தனர்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ரவி கூறியதாவது:-

    கல்வி வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்க ளின் விருப்பத்திற் கேற்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப் பட்டு அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி யாக அனைத்து வசதிகளும் வழங்கி கல்வி கற்பிக்கப்ப டுகின்றன.

    நடப்பா ண்டில் கூடுதலாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொ டங்க உள்ளது. மாணவ, மாணவி கள் சிறந்த முறையில் பயி ன்று உயர்கல்வி படிப்புக்கான அரசு தேர்வு களில் அதிக மதி ப்பெண் பெற்று மருத்து வம், பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் முன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுத்தொகையை வழங்கினார்

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    பின்பு10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 3000 (ரூபாய்) பரிசு தொகையும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 2000 (ரூபாய்) பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ஆயிரம் (ரூபாய்) பரிசு தொகையும் வழங்கினார்.

    இதேபோல் பள்ளி ஆசிரியை ஹேமலதாவும் பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்றதை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வார்டு உறுப்பினர் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    • தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.30-

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்கள், தோல்வியடைந்தவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அரசின் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, ஐ.டி.ஐ., படிப்பில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இதற்கு பள்ளிகளில் அணுகுவோருக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.இடைநிற்றல் தழுவியோருக்கு, இந்த வாய்ப்பை வகுப்பு ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. 

    ×