என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்கள்"
- வருகிற 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை ெதாடங்க உள்ளது.
- சேலத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
வருகிற 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை ெதாடங்க உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கு ஏற்ப வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை சென்னை உள்பட தமிழக முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழுவாக செல்வோர், மொத்தமாக பஸ்சை வாடகைக்கு எடுத்து பயணிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விரைவு போக்குவரத்து கிளை மேலாளரை அணுகலாம். தனி நபராக செல்வோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் . குழுவாக செல்வோருக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
- திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
- திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், ஒன்றிய பகுதிகளில் மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
- பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
கார்த்திைக மாத பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதம் மேற்கொண்டு சபரிமலை சென்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கார், வேன்கள் மூலம் செல்லும் நிலை உள்ளது.
பஸ்கள் இயக்க வேண்டும்
சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதுரையில் தற்போது வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குழுவாக செல்லா மல் தனியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இவர்கள் தேனி மாவட்டம் கம்பம், குமுளிக்கு சென்று அங்கிருந்து கேரள அரசு பஸ்களை பிடித்து நிலக்கல்லுக்கு செல்லும் நிலை உள்ளது.
குமுளி முக்கிய மையமாக உள்ளதால் அங்கு தமிழக பக்தர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். இதனால் கேரள பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பல கிலோ மீட்டர்தூரம் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி மற்றும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.
- சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை.
திருப்பூர் :
சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, பழனியில் இருந்து பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தற்போது வரை ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை. மாறாக கேரள மாநில விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.
இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சபரிமலைக்கு குழுவாக சென்று திரும்ப பக்தர்கள் விரும்பினால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. வழக்கமாக கி.மீ., க்கு பெறப்படும் கட்டணங்களே பெறப்படும். பஸ்களை முன்பதிவு செய்ய, 94450 14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
- தேவகோட்டை நகரில் போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்ட்டது.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் தனியார் பஸ்கள் விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று காலை நகர் காவல் ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கரிகாலன், மைக்கேல் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 தனியார் விதிகளை மீறிய பஸ்களை நகர் காவல் நிலையம் கொண்டு வந்து அந்த பஸ்களுக்கு ஏர்ஆரன், போக்குவரத்து விதிமீறல், நோ பார்க்கிங் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது ஆய்வாளர் சரவணன் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் நகருக்குள் அதிவேகத்தில் பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருத்துறைப்பூண்டி:
திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.
திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.
அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.
சேலம்:
சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.
- வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்கு னர் ராஜ்மோகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூறின்றி, பயணம்செ ய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர்,
திருத்துறை ப்பூண்டி, வேதா ரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை ,
காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன .
இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகின்றது.
- மீதமுள்ள 2 பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாளருக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாபநாசம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பெரும்பாலும் அரசு பஸ்களில் தான் செல்கின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நலன் கருதி கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்- கும்பகோ ணம் மார்க்கத்தில் இயக்க ப்படும் புறநகர் பஸ்கள் சிறிய ஊர்களில் நின்று செல்வதில்லை. இதனால் இந்த பஸ்களின் தடத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
தஞ்சாவூர்- பாபநாசம் இடையே மொத்தம் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மீதமுள்ள 2 பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறுக்கு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள தடம் எண்.51 பஸ் சேவை மற்றும் கும்பகோணம்-வீரமாங்குடி இடையே இயக்கப்பட்டு வந்த தடம் எண். 42 ஆகிய பஸ் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவராயன்பேட்டை கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கும்பகோணம் அய்யம்பேட்டை இடையே பாபநாசம், தேவராயன் பேட்டை, வடக்கு மாங்குடி வழியாக பஸ் சேவையை தொடங்க வேண்டும்.
கும்பகோணம்- திருவையாறு மார்க்கத்தில் சுவாமிமலை, கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்–பட்டுள்ளது.
- மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
- குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:-
பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் குட்டையில் பி.ஏ. பி. பாசன தண்ணீர் நிறைந்துள்ளது. அங்குள்ள மயானத்திற்கு செல்வதற்கு வழி இல்லை .எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகரன், (தி.மு.க.):- குடியரசு தின விழாவில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக இருக்கை வசதி செய்யப்படவில்லை.எனவே வரும் காலங்களில், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளித்து இருக்கை வசதி செய்யப்பட வேண்டும். பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள சுகாதார வளாகம் அசுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதேபோல பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராததால், பொதுமக்கள் ரோட்டில் நின்று பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ்கள் உள்ளே வராததால் வியாபாரம் பாதிப்படைவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
நகராட்சி ஆணையாளர் விநாயகம் :- இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈஸ்வரமூர்த்தி,( காங்கிரஸ் ):-நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிப்பதை தனியாருக்கு விடும் திட்டத்தில், உள்ளூர் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. கரையாம்புதூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சரி செய்ய வேண்டும்.
கனகுமணி துரைக்கண்ணன்,(அ.தி.மு.க.):- ராயர் பாளையம் பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அபிராமி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும்.மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
ஈஸ்வரி செல்வராஜ்,( பாஜக) :எனது வார்டு பகுதியில் சப்பை தண்ணீர் சரி வர வருவதில்லை. கடந்த ஆறு மாதமாக கேட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. குழாய்கள் தரம் இல்லாமல் அமைப்பதால் அடிக்கடி உடைந்து விடுகிறது.
நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு:- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டபாணி,( சுயேச்சை): வடுகபாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சப்பை தண்ணீரும் முறையாக வருவதில்லை. ஏற்கனவே ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தேன். மேலும் வரிவசூலில் வாட்டர் மேன்களை ஈடுபடுத்துவதால், குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க தாமதம் ஆகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிரேகா ரமேஷ் (பாஜக):- குடிநீர் பிரச்சினை தீவிரமாக உள்ளது. முன்பு மாதம் ஒருமுறை குழாய் உடைப்பு ஏற்படும். தற்போது மாதத்திற்கு 10 லிருந்து 12 முறை ஏற்படுகிறது. அதனை உடனடியாக சரி செய்வதற்கு பணியாளர்களும் வருவதில்லை. கேட்டால் வரி வசூலில் ஈடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள். குழாய் உடைப்பு பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறியாளர் ஜான் பிரபு:- சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. விரைவில் சரி செய்யப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட4வது வார்டு உறுப்பினர் சவுந்தரராஜன், எதுவும் பேசாமல் கூட்டத்தின் பாதியில் எழுந்து சென்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,நகராட்சி நிர்வாகத்தில், பலமுறை, பல கோரிக்கைகள் வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசி என்ன பயன் இருக்கப் போகிறது என கூறினார்.பின்னர் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை அமைந்துள்ள இடம், வண்டிப்பாதை,கிணறு, மயானம் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. எனவே,அதனை நில வகை மாற்றம் செய்து, பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என மாற்றம் செய்ய வருவாய்த் துறையை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பாரதிய ஜனதா கூட்டத்தில் கண்டனம்
- மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங்களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம்
கன்னியாகுமரி:
பாரதிய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலசங்கரன்குழியில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஸ்ரீகலா, ராமநாதன், பொதுச் செயலாளர் ஜெக நாதன், மாவட்ட துணை பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் சுடர்க்கின மனோகரகுமார், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் உட்பட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பல மகளிர் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை யின் இந்த நடவடிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கும், கட்சிக்கும் அயராது உழைத்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் அச்சமின்றி தேர்வு எழுதும் வழியில் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தில் சிறப்பாக நடத்திய கல்வியாளர் பிரிவு பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மாவட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங் களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, 4 வழி சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தேவையான மணல் ஜல்லி கட்டுமான பொருட்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு டன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க அயராது பாடுபட்டு வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ண னுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஒன்றிய தலைவர் பொன். சுரேஷ் நன்றி கூறினார்.
- தேவகோட்டையில் உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் தேவகோட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மாலையில் பள்ளி முடிந்து தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு செல்ல 4.30 மணிக்கு '3 ஏ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக மாணவ-மாணவிகளை புறக்கணிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசு பஸ் முன்கூட்டியே 4.15 மணிக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.