search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • கடந்த 24-ந்தேதி பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானம் குடித்தார்
    • கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்த நகரை சேர்ந்தவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின். கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

    கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெரும் துயரத்தில் உள்ள மாணவன் அஸ்வின் வீட்டிற்கு கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனுஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஜோ ஜெப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.

    19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர், 800 மீட்டர் என அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100, 200, 400, 600, 800 மீட்டர் ஓட்டம் முதலான போட்டியில் மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டும் போட்டியில் பிரணவ், ஜெப்ரி, சண்முகம் ஆகியோர் முந்தைய சாதனையை முறியடித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
    • தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுப்ரமணிய பிரசாத் துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஒலினா. இவர்களது மகன் லெயான்ஷ் பிராசாத்(வயது5). தற்பொழுது துபாயில் யூ.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் கலாம் சாதனையாளர் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.

    இதற்கான விருதுகளை இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியனிடமிருந்தும் தனித்துவம் வாய்ந்த சாதனையாளர் விருதினை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜூலியட்டிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.

    இவர் மேலும் பல உலக சாதனைகள் புரிந்து பல புத்தகங்களில் இடம் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை ஏற்கனவே தனது இரு கைகளையும் எதிரெதிர் திசையில் ஒருநிமிடத்தில் அதிக அளவில் சுற்றி உலக சாதனை புரிந்து உலக சாதனையாளர் புத்தகம், ஆசிய சாதனையாளர் புத்தகம், இந்திய சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி திணிப்பையும், ஓரே நுழைவு தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கோஷம்
    • கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    நாகர்கோவில்:

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவு தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாண வரணி, இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா ளரும் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் சிவராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம். ராஜ ரத்தினம், பொருளா ளர் கேட்சன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், புஷ்பலீலா ஆல்பன் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தாமரை பாரதி, துணை செயலாளர் பூதலிங்கம்,மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பிராங்கி ளின், பாபு, லிவிங்ஸ்டன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ததேயுபிரேம்குமார் நன்றி கூறினார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப் பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மேயர் மகேஷ் பேசுகையில் மத்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணித்து வருகிறது.

    தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விட மாட்டோம். கடந்த நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதி களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

    • தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கிடையே பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர் 1, மாணவிகள் 13 பேர் என மொத்தம் 14 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுப் போட்டியில் முதல் பரிசு தொகை ரூ. 5 ஆயிரத்தை 10 -ம் வகுப்பு மாணவி அக் ஷரா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரத்தை 12 -ம் வகுப்பு மாணவி நீது, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரத்தை 11 -ம் வகுப்பு மாணவி நிபிஷா, சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் 9 -ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் மற்றும் 7 -ம் வகுப்பு மாணவி லேகா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5ஆயிரத்தை முதுகலை ஆங்கிலம் துறை மாணவி கனிஷ்மா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரத்தை இளங்கலை கணித துறை மாணவி நேஹா, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரத்தை முதுகலை வணிகத்துறை மாணவர் டெல்ஜின் ஆகியோர் பெற்றனர். பின்னர் பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஷிஷ்குமார் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
    • எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன். அவரது மகன் ஆஷிஷ்குமார்(வயது 14) இவர் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் செல்லும் விழுப்புரம் – திருச்சி ரயில் மார்க்கத்தில் இயற்கை உபாதைக்கு ரயில் பாதையை கடந்து சென்று மீண்டும் அவ்வழியே கடந்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமை யிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதுநிலை படிப்புக்கு தேர்வுக்காக ஜப்பான் நாட்டிற்கு இளையான்குடி மாணவர் செல்கிறார்.
    • தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்து வந்தவர் தங்க செல்வம். இவர் தற்போது ஜப்பான் நாட்டின் சிசுகோ பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கான வேதியியல் முதுநிலை பட்டம் கல்வி உதவித்தொகையுடன் படிக்க தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை, வியட்நாம் வழியாக ஜப்பான் சென்றடைந்தார்.

    அவருக்கு அக்டோபர் முதல் 2 ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை எளிய வேலை செய்து வருபவர். இவர் கவிஞர் ஹிதாயத்துல்லாவின் (சண்முகம்) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் சென்றுள்ள மாணவர் தங்க செல்வத்தை கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.

    • குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார்.
    • கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலியானார்.

    குமாரபாளையம்:

    சென்னையை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார். ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னையில் இருந்து குமாரபாளையம் வந்த இவர் கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைகாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் கார் டிரைவர் சேலம் அருகே உள்ள மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (34) என்பவரை கைது செய்தனர்.

    • மகளிர் போலீசார் நடவடிக்கை
    • பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் படித்து வருகிறார். அவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பெற்றோர் தேடினார்கள். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மாணவி, தன்னுடன் படித்த வாலிபர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை சீரழித்து விட்டதாக கூறினார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் இது தொடர்பாக கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் இன்று காலை மாணவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து காதில் கம்மல் காலில் கொலுசு அணிந்துள்ளார்.

    விரதம் இருப்பதால் மாணவர் பள்ளிக்கும் அதனை கழற்றாமல் அப்படியே சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் அந்த மாண வனிடம் கம்மல் மற்றும் காலில் கிடந்த கொலுசை அகற்றிவிட்டு பள்ளிக்குள் வருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவன் கோவிலுக்கு விரதம் இருந்து அவற்றை அணிந்திருப்பதால் அவற்றை கழற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அந்த மாணவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவ னின் பெற்றோர் பள்ளிக் குச் சென்று ஆசிரியரு டன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்கு விரதம் இருப்பதால் மாணவன் அணிந்திருக்கும் கம்மல் மற்றும் கொலுசை அகற்ற முடியாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மற்ற பள்ளியில் அனைத்து மாணவர்களும் இதை அணிந்துதான் செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு ஆசிரியரோ தலைமையாசிரியரோ இதனை கழற்ற சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள் மட்டும்தான் உங்கள் பள்ளியில் கழற்ற சொல்கின்றனர், என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆசிரியருடன் மாண வரின் பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் உறவினர்களும் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.
    • காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா்.

    காங்கயம்:

    திருப்பூா் நல்லூா்-சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் மகன் தீபக்பிரசாத் (வயது20). இவா் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா்.

    இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று உடன் படிக்கும் கதிா் (19), நவீன் (19), பிரவீன் (19), தீபன் (22) ஆகியோருடன் நத்தக்காடையூா்-நஞ்சப்பகவுண்டன் வலசு, முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.

    தீபக் பிரசாத்துக்கு நீச்சல் தெரியாது என்பதால், காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா். குளித்து முடித்துவிட்டு தண்ணீா் கேனை அவிழ்த்துவிட்டு கிணற்றில் இருந்து மேலே ஏறியபோது, நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

    இதையடுத்து உடன் இருந்த சக நண்பா்கள் காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், அவா் அதற்குள் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீபக் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×