search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 171 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் எஸ்.என்.குமார், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, 13-வது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்கபெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீதாராமன், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், பேரூர் தலைவர் கிங்ஸ்லின், பேரூர் அ.தி.மு.க. செயலர் சிவபாலன், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    • மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.

    பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர்அண்ணா மற்றும் தந்தைபெரியார் ஆகியோரின் பிறந்தநாளை யொட்டி குமரி மாவட்டத்தில் கடந்த 15 மற் றும் 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டதி பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளிகளின் சார்பில் 40 பேரும், கல்லூரிகள் சார்பில் 15 பேரும் கலந்து கொண்டனர்.இதில் மொத்தம் 16 பேர் பரிசு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசை கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி

    12-ம் வகுப்பு மாணவி வன அஜிஸ்னா, 2-ம் பரிசை மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆன்சிலின் ஷேகா, 3-ம் பரிசை வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி லேகா மற்றும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரத்தை கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வினயாசுமி சிவா, பூதப்பாண்டி சர்.சி.பி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டி யில் முதல் பரிசை முளகு மூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி முதுகலை ஆங்கிலம் (இரண்டாமாண்டு) மாணவி விஜித்ரா, 2-ம் பரிசை நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவகல்லூரி இளங்கலை தமிழ் (முதலாமாண்டு) மாணவி அகல்யா, 3-ம் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரிமுதுகலை ஆங்கிலம் (முதலாமாண்டு) மாணவி ஷெரின் ஆகியோர் பெற்றனர்.

    தந்தை பெரியார் பிறந்தநாளான கடந்த 17-ந்தேதியன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி யில் முதல் பரிசை மாடத்தட்டுவிளை புனித லாறன்ஸ் மேல்நி லைப்பள்ளி மாணவி நிபிஷா, 2-ம் பரிசை சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, 3-ம் பரிசை நாகர்கோவில் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிகா, சிறப்பு பரிசுகளை திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாபுல் உசேன் மற்றும் மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்சயா ஆகியோர் பெற்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்த வக் கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டா மாண்டு) மாணவி டெபி டேஷி, 2-ம் பரிசை தென்திரு விதாங்கூர் இந்துக் கல்லூரி இளங்கலை வணிகவியல் (முதலாமாண்டு) மாணவி சுவாதி, 3-ம் பரிசை முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டாமாண்டு) மாணவி வின்சி ஆகியோர் பெற்றனர். பரிசுத் தொகையும், பாராட்டுச்சான்றும் பின்னர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்து பலியானார்.
    • இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் சீனிவா சன். இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 20). இவர் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 6-ம் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரம்மி விளையாடினார்.இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.வங்கி கணக்கில் பணம் இல்லாத கண்டு அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். அதில் மணமடைந்த மாணவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தினார்.

    மேல் சிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்னகுமார்.

    இவரது மகன் டெனி (வயது 19). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறி யியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துள் ளார்.

    சம்பவத்தன்று டெனி தனது மோட்டார் சைக்கி ளில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அதே பகுதி யைச் சேர்ந்த ஆசீர் அமர்ந்திருந்தார்.

    மோட்டார் சைக்கிள் வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது அங்கு குறுக்கே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் டெனி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த டெனி அருகில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி
    • மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்

    குடிமங்கலம் :

    உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி.இவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில், தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி, சக ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேநேரம், இவரது செயலைக்கண்ட மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, தாங்கள் சேமித்த தொகையை திரட்டி, அவர்களே வகுப்பறைக்கு பெயின்ட் அடித்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் செயலை தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.

    • பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது.
    • கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி யில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    தவறி விழுந்த மாணவர்

    இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 77 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இதில் 9-ம் வகுப்பு படிக்கும் சேலம் மாவட்டம் கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆகஸ்டு 25 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் எஸ்.எம். ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 18.08.2022 முதல் 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    தகுதிவாய்ந்த மாணவி கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோ கிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட் டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல்நுட்பவிய லாளர் ஆகிய தொழிற்பிரி வில் சேர்ந்து பயிற்சி பெற லாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்

    மாணவிகள் தொழிற் கல்வி சேர்க்கைக்கு 18.08.2022 முதல் 25.08.2022 வரை நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை சாலையில், வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் திற்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண் ணப்பிக்கலாம்.

    பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலை யில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, பாட புத்தகங்கள். காலணி. மாதந்தோறும் வருகைக் கேற்ப ரூ.750 உதவித் தொகை மற்றும் கட்டண மில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைபடித்த மாணவிகளுக்கு கூடுத லாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மேலும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்து றையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற் கும் ஏற்பாடு செய்து தரப்ப டும். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், கூகுள் பே வாயிலாக செலுத்தலாம்.

    இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 'அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந் தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.

    பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில்சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை கள், செட் காலணிகள் அரசால் வழங்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு நாகர்கோவிலில், கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியில் கல்லூரி மாணவர் பாலியானார்.
    • தற்கொலைக்கு தூண்டியதாக தாய்-மகன் மீது வழக்கு

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவர், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம்,5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரூ.65 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    இதில், வட்டியுடன் சேர்த்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். மீதித்தொகை, 15 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாகர், அவருடைய தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் ஆனந்தன் வீட்டிற்கு சென்று, பாக்கித் தொகையை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும், ஆனந்தன் மகனான கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை, கடனுக்காக பிடிக்க சென்றுள்ளனர். எனது அப்பா வாங்கிய கடனுக்காக, நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை எதற்கு பிடிக்க செல்கிறீர்கள் என நிர்மல் ராஜ் கேட்டுள்ளார்.

    வாங்கிய கடனை திருப்பித் தர துப்பில்லை, நீங்கள் எல்லாம் எதுக்குடா உயிரோடு இருக்கிறீங்க, போய் சாவுங்கடா என, சுதாகர் அவரது தாயார் சரஸ்வதி இருவரும் சேர்ந்து, நிர்மல் ராஜ் மற்றும் அவரது பெற்றோரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிர்மல் ராஜ் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நங்கவள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் விசாரித்தனர். விசாரணை யில் சுதாகர் மற்றும் சரஸ்வதி திட்டியதால் நிர்மல்ராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுதாகர், சரஸ்வதி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுதாகரை போலீசார் கைது செய்தனர். ‌ தலைமறைவாக உள்ள சரஸ்வதியை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    • இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.

    தேவகோட்டை

    கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறாவயல் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மருது அமல்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோர் முள்ளிக்குண்டு அருகே காரைக்குடி தேவ கோட்டை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கானதான்காடு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி மாணவர் விஜய் (21) மறித்து சோதனை செய்தனர். இதில் அவர் 180 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.

    • இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது.

    கன்னியாகுமரி :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் தேச பாதுகாப்பு மற்றும் கல்வியை பாதுகாக்கவும் "நீட்" தேர்வு மற்றும் "கியூட்" தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும் இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஷானு தலைமை தாங்கினார். மாநில தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் முபீஸ் அகமது வரவேற்று பேசினார். பிரச்சார பயணத்தை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பிரசார பயணம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் செல்கிறது. இந்த வாகன பிரசார பயணம் வருகிற 18-ந் தேதி திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது.

    மொத்தம் 5ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து இந்த பிரச்சார பயணம் தொடங்கும் போது போலீசார் ரத யாத்திரை என்று நினைத்து ரத யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி அதனை தடுக்க முயன்றனர். இதனால் மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக வாகன பிரச்சார பயணம் என்று தெரிந்ததும் போலீசார் அதற்கு அனுமதி அளித்தனர் இதைத் தொடர்ந்து அங்குஇருந்து வாகன பிரச்சார பயணம் புறப்பட்டு சென்றது.

    • பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துெகாண்டார்.
    • எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மேலரத வீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ் (வயது 52). இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் செல்வக்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊடங்கிற்கு செல்வக்குமார் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை சுடர்ராஜ் தனது மனைவியுடன் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த செல்வக்குமார் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் பலனில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தனி அறையில் செல்வக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து உடனே ஊர் திரும்பிய சுடர்ராஜ்-மேகலா மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. செல்வக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×