search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    ஆத்தூர் அருகே மாணவி கொடூரக் கொலை: கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ரோஜா(வயது19). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சாமிதுரை கூடமலையில் உள்ள பெரியப்பா சின்னதுரை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவை காதலித்து வந்தார். ஆனால் ரோஜா விலகிச் சென்றதாக கூறப்படுகிறது .இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கு சென்று அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களுக்கு பிறகு மலையிலிருந்து இறங்கிய சாமிதுரையை அந்த பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

    இதை தொடர்ந்து போலீசார் சாமிதுரையை கைது செய்தனர். கைதான சாமிதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவும் நானும் காதலித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரோஜா என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்ல வீட்டின் முன்பு நின்றிருந்த ரோஜாவுடன் பேசினேன் .ஆனால் ரோஜா என்னிடம் பேசாமல் தவிர்த்தார்.

    இதனால் மனமுடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன், அதன்படி கடந்த 6 -ந்தேதி சென்னையில் இருந்து ஆத்தூருக்கு வந்த நான் டீசல் வாங்கி கொண்டு ரோஜா வீட்டிற்கு சென்றேன், அங்கு அவளை தீ வைத்து எரித்து விட்டு நானும் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

    ஆனால் மண் எண்ணையை அவரது உடலில் ஊற்றிய நிலையில் அவர் சகதியில் உருண்டு புரண்டதால் அவர் மீது தீ பிடிக்க வில்லை . மேலும் அவரது சகோதரி நந்தினியும் அவரை தீ வைத்து எரிக்க விடாமல் தடுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தேன்.

    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நான் தொடர்ந்து 3 நாட்களாக மலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சோளக்கதிர், மாங்காய், குச்சிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வந்தேன். தண்ணீர் குடிக்க வந்த போது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார் . தொடர்ந்து அவரை போலீசார்ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • தேரூர் பேரூராட்சி தலைவி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    நாகர்கோவில்:

    ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் கல்லூரி ஸ்கவுட் ரோவர்ஸ் அமைப்பு மற்றும் தேரூர் பேரூராட்சியும் இணைந்து உலக சுற்றுச் சூழல் தின விழாவை நடத்தினர்.

    கல்லூரி துணைத் தலைவர் அருள் ஜோதி தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மற்றும் புனிதா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சுற்றுச் சூழல் குறித்து கல்லூரி துணைத் தலைவர். அருள் ஜோதி பேசுகையில், தொழில் நுட்ப, தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது என்றும் ரசாயனக்கழிவுகள் புகை போன்றவை நீர் நிலைகள், வளிமண்டலம் போன்ற வற்றை மாசுபடுத்துவதோடு உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் பேசினார்.

    மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி பேராசிரியர் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக மாணவர் பெஞ்சமின் வரவேற்புரையாற்ற மாணவி சிக்லின் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ் மேலாளர்கள் கோபி மற்றும் நிதி மேலாளர் சேது.கல்லூரி பேராசிரியர்கள் துரைராஜ். சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி. அலுவலக செயலர் சுஜின், கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஜாண் டிக்சன், பெபின். ஜெனில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கீழக்கரை மாணவர்ஆசிய அளவில் சாதனை படைத்தார்.
    • ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாயார் நித்தாஷா பர்வீன் மற்றும் அல் ரய்யான் என்ற சகோதரியும் உள்ளனர்.

    இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்த கத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். முந்தைய சாதனையில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தான்.

    அதனை முறியடிக்கும் வகையில் ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2022 ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்து ள்ளதை மாணவனை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவருடைய சாதனை 18 நாடுகளை சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார். 11 வயதைச் சேர்ந்த இளம் சாதனையாளர் இன்ஷாப் முஹம்மதை கவுரவிக்கும் வகையில் துபாய் வருகை தந்த அவருக்கு இந்திய துணை தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூதரக அதிகாரி ராம்குமார் வரவேற்று பாராட்டி பரிசு வழங்கினார். ஈமான் சார்பில் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    எமிரேட்ஸ் டென் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் இளவரசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார். ஒலிம்பிக்கில் மத்திய, மாநில அரசுகள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வேன், என்றார்.

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(வயது 22). இவர் தனியார் கல்லூரியில் பி.ஈ., இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவரது உறவினர் வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் வழக்குபப்திவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் தகுதி பெற்ற 25 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினார்கள். இதில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை 2-ம் ஆண்டு படிக்கும் மோகன்ராஜ் முதலிடம் பிடித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரத்திற்கான காசோலை பெற்று சாதனை படைத்தார்.

    இவரை கல்லூரியின் முதல்வர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • மதுரையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    மதுரை

    மதுரை சோலையழகுபுரம் ஆட்டுமந்தை சந்து பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் பிரவீன் கார்த்திக் (வயது 17). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பிளஸ்-2 பரீட்சை எழுதினார். இதில் அவர் சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் கார்த்திக் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருநகர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சங்கர் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை உச்சபரம்புமேடு ஜானகி தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி மலர்விழி (25). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மலர்விழி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடலூரில் நீட் தேர்வு எழுதியிருந்த மாணவர் ஒருவர், இணையதளத்தில் வெளியான மாதிரி வினாத்தாளில் விடை வேறு மாதிரி இருந்ததால், தோல்வி பயத்தில் தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #NEET
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி. இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகன் அருண்பிரசாத் (வயது 19). இவர் கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அப்போது அவர் 1150 மதிப்பெண் பெற்றிருந்தார்.

    மருத்துவப் படிப்பு படிக்க மாணவர் அருண்பிரசாத் ஆசைப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு எழுதினார். அதில் குறைவான மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து நீட் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த அருண்பிரசாத் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை அருண் பிரசாத் எழுதினார். இந்த நிலையில் நேற்று முதன்தினம் இணையதளத்தில் நீட் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டது. இதனை அருண்பிரசாத் பார்த்தார்.

    அதில் தான் எழுதிய விடைகளுக்கும், மாதிரி விடைத்தாளில் இருந்த விடைகளுக்கும் அதிக அளவில் வித்தியாசம் இருந்தது. எனவே இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாமல் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்தார்.

    இது குறித்து தனது தாத்தாவிடம், இனிநான் டாக்டராக முடியாது என கூறி கண்ணீர் வடித்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று காலையில் அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

    அருண்பிரசாத் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். நீட் தேர்வில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை 3 மணிக்கு அருண்பிரசாத்தின் தாய் வசந்தி வீட்டுக்கு வந்தார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த அருண்பிரசாத்தின் தந்தை பாபுவும் உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

    பாபு-வசந்தி தம்பதிக்கு அருண்பிரசாத் ஒரே மகன் ஆவார். அவரை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர். மகன் இறந்தது குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க கூறியதாவது:-


    அருண்பிரசாத் சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்து வந்தான். மேலும் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தான்.

    அதேபோல் பிளஸ்-2 விலும் நன்றாக படித்தான். அவன் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வான் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்து வந்தோம். இதற்காக தனிக்கவனம் செலுத்தி அவனை ஊக்குவித்து வந்தோம். இதனால் நண்பர்களுடன் கூடு விளையாட செல்லாமல் படித்து வந்தான். எங்களது ஒரே மகனை டாக்டராக பார்க்க ஆசைப்பட்டோம். ஆனால் இப்போது அவனை இழந்து விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அருண்பிரசாத் தற்கொலை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அருண்பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலையில்பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அருண்பிரசாத் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #NEET
    ×