என் மலர்
நீங்கள் தேடியது "காந்தி ஜெயந்தி"
- நகராட்சி கமிஷனர் உத்தரவு
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
வேங்கிக்கால்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
- நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை:
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அங்கு மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கொண்ட பஜனை குழுவினர் பங்கேற்று மகாத்மா காந்தியின் புகழை போற்றும் வகையில் பஜனை பாடல்களை பாடினார்கள்.
இதனை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கேட்டு ரசித்தனர்.
- முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
- 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் போலீஸ் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்படும் எனவும், முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விற்பனை தொடங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க கடையில் குவிந்தனர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
- குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை:
காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.
சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.
இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.
அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.
- காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சை தலைமைதபால் நிலையம் எதிரில் உள்ள ராணுவத்தினர் மாளிகை காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்து
கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் உதவி இயக்குநர், பிரான்சிளப் தெரசாமேரி, கதர் அங்காடி மேலாளர் சாவித்திரி மற்றும் அரசு அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு எங்கள் கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கை யாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.
மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.
கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றிருக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், உல்லனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ. மணிகண்டபிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந்தேதி தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் எனது (ஜெ. மணிகண்டபிரபு) தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரே சன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஸ்ரீதர், பால சுப்பிரமணியன் ஆகியோரால் நாகர்கோவில் வடசேரி, தக்கலை, குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்ெகாள்ளப்பட்டது.
மேற்படி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அக்டோபர் 2-ந்தேதி விடுமுறை அளிக்கப் பட வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்து டன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.யிலும், உணவு நிறுவ னங்களின் வேலை அளிப்ப வர் படிவம் ஐ.வி.இ.இ.யிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலா ளர்களிடம் கையொப்பம் பெற்று ஒரு நகலை நிறுவ னத்தின் அறிவிப்பு பலகை யிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை உதவி ஆய்வாளர்க ளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பி வைக்க வேண்டும். இதனை கடைப் பிடிக்க தவறிய மற்றும் விடுமுறை அளிக்காத 33 கடைகள், 20 உணவு நிறுவனங்களின் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
- முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.
- பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
- மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது .
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் முருகதாஸ், இந்துமதி, பிரமிளா, பத்மா ,ஜெயலெட்சுமி, ஜெயந்தி, மதுமதி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் கிரிஜா, கிராம அலுவலர் மணிகண்டன், கோசி மணி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
- மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி, கதர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
- கதர் பொருட்கள் விற்பனையில் படைக்கப்பட்டுள்ள சாதனை, கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது.
புதுடெல்லி:
மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி, கதர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, டெல்லியில் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள காதி பவனில் காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, சாதனை அளவாகும்.
இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கதர் பொருட்கள் விற்பனையில் படைக்கப்பட்டுள்ள சாதனை, கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது. மக்களுக்கு பிடித்திருப்பதால், கதர் விற்பனை தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன்.
அத்துடன், 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை இது வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய மந்திரிசபை முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இம்முடிவு, கோடிக்கணக்கான மஞ்சள் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதுடன், அவர்களுக்கு நல்ல சந்தையை உறுதி செய்யவும், சிறப்பான வாழ்வு அமையவும் பயன்படும்.
தெலுங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இது, தெலுங்கானா இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதாக அமையும்.
பழங்குடியினர் கலாசாரத்தை ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல சூழலியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உட்பட தலைநகர் டெல்லியை நோக்கி லடாக்கில் இருந்து பாதயாத்திரை பேரணியாக டெல்லியை நோக்கி வந்த 120 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
லாடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயேச்சை உறுதி செய்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது அட்டவணையில் லடாக்கினை சேர்க்க வேண்டும், மத்திய அரசு லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திவரும் சோனம் வாங்சுக் லடாக் மக்கள் ஆதரவுடன் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பாதயாத்திரை தொடங்கிய வாங்சுக் நாளை [அக்டோபர் 2] காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பேரணியை மமடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த 120லடாக் போராளிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம் .. தடை உத்தரவு அமல் - ராகுல் கண்டனம்
உடன் அவர் தடுப்புக்காவலில் வைகைப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாங்சுக் மற்றும் நூற்றுக்கணக்கான லடாக்கியர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். லடாக்கின் எதிர்காலத்திற்காக போராடினார்கள் என்பதற்காக ஏன் முதியவர்களையும் காவலில் வைத்துளீர்கள் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, விவசாயிகள் எப்படி தங்களின் போராட்டம் மூலம் மோடியின் சக்கவியூகத்தை உடைத்தார்களோ அதே போல மீண்டும் அது உடையும், உங்களின் அகந்தையும்தான், லடாக்கின் குரலுக்கு நீங்கள் செவி சாய்த்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தி 156-வது பிறந்த நாள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
சென்னை:
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
கவர்னர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபம் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தும் காந்தியின் உருவ படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக அரசின் சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார்.
அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.