என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 218955
நீங்கள் தேடியது "டமாஸ்கஸ்"
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்று வெளியேற்றப்பட்டனர். #IslamicStatefighters #leavingDamascus
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.
யூப்ரட்டஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த ஆண்டு மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியது.
சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்று வெளியேற்றப்பட்டதாக இங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேற்கு சிரியாவில் துருக்கி, ஈராக், ஜோர்டான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், பாலஸ்தீனம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள யார்மோர்க் அகதிகள் முகாம் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் ஒரு பேருந்து மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பாடியா நகரை நோக்கி சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. #IslamicStatefighters #leavingDamascus

×

X