search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    • வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.
    • பீரோவுக்குள் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மிளகாய் பொடி இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புக்குள் யானை புகுந்தது.
    • தெழிலாளி வீட்டை அந்த யானை சேதப்படுத்தியது.

    கூடலூர், ஜூன்.11-

    கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் பகு தியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து சிரஞ்சீவி வீட்டின் பின்பக்க சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் சத்தம்கேட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் எழுந்தனர்.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகு றித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, காட்டு யானை சேதப்படுத்திய வீட்டை சீரமைக்க வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கூடலூரில் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கிழக்கு ஒன்றியம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது

    ஊட்டி:

    தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் உதவித் தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து வழங்க வேண்டும், குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூடலூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாந்தி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் அனைத்து பகுதியிலும் சேரும் குப்பைகள் பெத்துக்குளம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதி மலைபோல் குவிந்து காணப்பட்டது. அடிக்கடி அங்கு தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசுபட்டது.

    எனவே 8 மற்றும் 10 வது வார்டு பொதுமக்கள் குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பம் நகராட்சி குப்பைக்கிடங்கில் தற்காலிகமாக கொட்டப்பட்டு வந்தது.

    2 மாதத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 மாத கால அவகாசம் முடிந்து விட்டதால் கம்பம் குப்பைக்கிடங்கில் கடந்த 10 நாட்களாக குப்பை கொட்ட முடியவில்லை. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடந்தன.

    நகராட்சியின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து கூடலூர் - குமுளி சாலையில் இன்று பொதுமக்கள் பஸ் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் கூடலூர் வடக்கு, தெற்கு போலீசார் சமரசம் செய்தும் கேட்கவில்லை.

    1 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று மாலைக்குள் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×