search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 219231"

    • ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் டியூபுலர் ஃபிரேம், 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
    • இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான கியூஜெ மோட்டார் உடன் இணைந்து சர்வதேச சந்தையில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இந்த கூட்டணியின் அங்கமாக X500 பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் ஆட்டோ ஷாங்காய் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹார்லி டேவிட்சன் X500 மாடல் பெனலி லியோன்சினோ 500 மாடல் உருவாகி இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் X500 மாடலும் டியூபுலர் ஃபிரேம் மற்றும் 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

     

    ஹார்டுவர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், டூயல் டிஸ்க் பிரேக், இருபுறமும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

    இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்து இருப்பதால், புதிய X500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. எனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலில் அழகு சார்ந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
    • செயல்திறனை பொருத்தவரை இந்த மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்றே தெரிகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் விளம்பர படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    புகைப்படங்களின் படி புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலில் அழகு சார்ந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் முன்புறம் முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்ப்லிட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மேல்புறத்தில் ஹை பீம், கீழ்புறம் லோ பீம் உள்ளது. இத்துடன் H வடிவம் கொண்ட டிஆர்எல் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் உள்ள விண்ட்ஸ்கிரீன் முழுமையாக பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள எரிபொருள் டேன்க் கவர் ரிடிசைன் செய்யப்பட்டு, ஸ்போர்ட்ஸ் சார்ந்த ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேட் ஃபினிஷ் பெயிண்ட் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை இந்த மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்றே தெரிகிறது. இந்த யூனிட் 8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலின் விற்பனை ஏற்கனவே வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதால், இதன் இந்திய வெளியீடு தாமதமாகி இருக்கிறது. அனைத்து புதிய மோட்டார்சைக்கிள்களும் இந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதால், ஹீரோ நிறுவனம் புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

    • புதிய பல்சர் N160 மாடல் E20 ரக எரிபொருளில் இயங்கும் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • இந்த மாடலில் 164.82 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற வாகனங்களை இந்திய சந்தையில் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பல்சர் N160 மாடல் புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2023 பஜாஜ் பல்சர் N160 OBD2 மாடல் விற்பனை மையங்களுக்கு வரத்துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் N160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 645, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 பல்சர் N160 மாடலில் புதிய OBD2 ஹார்டுவேர் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் உள்ள ஆன்போர்டு சிஸ்டம், எமிஷன்களை ரியல்டைமில் டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடல் E20 ரக எரிபொருளில் இயங்கும் என்ஜின் கொண்டிருக்கிறது. இவை தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     

    அந்த வகையில் புதிய பஜாஜ் பல்சர் N160 மாடலில் 164.82 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15.68 ஹெச்பி பவர், 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாடலின் ஸ்டைலிங்கில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    அந்த வகையில், இந்த மாடல் சிங்கில் பாட் ப்ரோஜெக்டர் ஸ்டைல் ஹெட்லைட், டுவின் டிஆர்எல்கள், பாடி நிறத்தால் ஆன ஹெட்லேம்ப் கவுல், கலர் மேட்சிங் முன்புற ஃபெண்டர், என்ஜின் கவுல், ஸ்ப்லிட் ரக சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ப்ரூக்லின் பிளாக், ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் புளூ என்று மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடவில் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்கும் என தகவல்.
    • இதுதவிர ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 450 மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹிமாலயன் 450 மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    450சிசி பிரிவில் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 450சிசி மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர், புதிய தலைமுறை புல்லட் 350 மற்றும் ஹிமாலயன் 450 போன்ற மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த வரிசையில் 450சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகபட்சம் ஐந்து புதிய 450 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு 450சிசி மோட்டார்சைக்கிளில் முற்றிலும் புதிய 450சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 40 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
    • பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட 350 சிசி சீரிஸ் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இவைதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேலும் சில மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இவை புல்லட் 350 மற்றும் கிளாசிக் 350 பாபர் பெயர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

     

    ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் பாபர் 350 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் கிளாசிக் 350-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், இதில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பாபர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய கிளாசிக் 350 பாபர் மாடலின் டிசைன் மற்றும் பாடி பேனல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடல் கிளாசிக் 350 போன்ற ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இவைதவிர புதிய கிளாசிக் 350 பாபர் மாடலில் கருப்பு நிறத்தில் சற்றே பிரமாண்ட எக்சாஸ்ட், உயரமான ஹேண்டில்பார், பிளாக் நிற ORVMகள், வயர் ஸ்போக் ரிம்கள், டியல் நிற வால் கொண்ட டயர்கள், ரியல் டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளன. சூப்பர் மீடியோர் மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy : rushlane

    • சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2006 பிப்ரவரி மாத வாக்கில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது இந்திய பணிகளை துவங்கியது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பிரிவு சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் 70 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. குருகிராமை அடுத்த கெர்கி தௌலா ஆலையில் இருந்து 70 லட்சமாவது யூனிட்டை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

    70 லட்சமாவது யூனிட் சுசுகி வி ஸ்டார்ம் SX மாடல் ஆகும். இந்த யூனிட் மஞ்சள் நிற வேரியண்ட் ஆகும். 2006 பிப்ரவரி மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் பணிகளை துவங்கியது.

     

    "மார்ச் 2023 வரை நிறைவுற்ற நிதியாண்டில் மட்டும் நாங்கள் 9 லட்சத்து 38 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறோம். எங்களின் வருடாந்திர வளர்ச்சி 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 24.3 சதவீதம் ஆகும்," என்று சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி உமெடா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் சுசுகி வி ஸ்டார்ம் SX, ஜிக்சர் SF 250, ஜிக்சர் SF, ஜிக்சர், அக்சஸ் 125, அவெனிஸ், பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் EX போன்ற மாடல்களை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் வி ஸ்டார்ம் 650XT, கட்டானா மற்றும் ஹயபுசா போன்ற மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 

    • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியூக் மாடல்களை புதிய OBD 2 விதகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது.
    • புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள், 125 டியூக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரோட்ஸ்டர் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கேடிஎம் பைக் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 892 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் 2023 கேடிஎம் 390 டியூக் மாடலும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டார்க் கல்வேனோ மற்றும் லிக்விட் மெட்டல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

     

    கேடிஎம் 125 டியூக் மாடலும் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் செராமிக் வைட் என இருவித நிறங்களிலேயே கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், டுவின் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏபிஎஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 கேடிஎம் 125 டியூக் மாடலில் 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் போஷ் எலெக்டிரானிக் ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 ஹெச்பி பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     

    2023 கேடிஎம் 390 டியூக் மாடலில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது.
    • கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.கேடிஎம் நிறுவனத்தின் 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 46 ஆயிரத்து 651, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2023 மாடலில் சமீபத்திய புகை விதிகளுக்கு பொருந்தும் மெக்கானிக்கல் அப்டேட்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய மாடலிலும் 248.76சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் போஷ் எலெக்டிரானிக் ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     

    இவைதவிர 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட்கள் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன், 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க், 85mm ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், முன்புறம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    சஸ்பென்ஷனுக்கு 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோட் செய்யப்பட்ட மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 320mm சிங்கில் டிஸ்க், 230mm சிங்கில் ரோட்டார் மற்றும் ஃபுளோடிங் கேலிப்பர் உள்ளது. இந்திய சந்தையில் 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் சுசுகி வி ஸ்டார்ம் SX, ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பெனலி TRK 251 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • முன்னதாக 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடல் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலை OBD2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகிறது. 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் புதிய புகை விதிகளுக்கு ஏற்ற ஹார்டுவேர் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய மோட்டார்சைக்கிளின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 38 ஆயிரத்து 746 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் X மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்து 652 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன், என்ஜின் கவுல், 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட்கள், சைடு-ஸ்லங் எக்சாஸ்ட், முன்புறம் 19 இன்ச் அலாய் வீல், பின்புறம் 17 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் அட்லாண்டிக் புளூ மற்றும் டார்க் கல்வேனோ பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் போன்றே இந்த மாடலின் ஹார்டுவேர் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், போல்ட் செய்யப்பட்ட சப்-ஃபிரேம் உள்ளது. 

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
    • புதிய 390 அட்வென்ச்சர் X மாடல் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட சற்றே குறைந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் 390 அட்வென்ச்சர் சீரிசில் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் X பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய மாடல், அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட குறைந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விலையும் சற்றே குறைந்து இருக்கிறது.

    ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆஃப்-ரோட் மோட், ஸ்லிப்பர் கிளட்ச், 12 வோல்ட் யுஎஸ்பி சாக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. சற்றே குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மாடலில் ப்ளூடூத் மாட்யுல் மற்றும் டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்படவில்லை. மாறாக எல்சிடி டேஷ்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குறைந்த எலெக்ட்ரிக் ரைடர் அம்சங்கள் உள்ளன.

     

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 390 அட்வென்ச்சர் X மாடலில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் ஒவர்ஹெட் கேம்ஷாஃப்ட் உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் ஹார்டுவேர் அம்சங்களும் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடலில் 43mm அப்சைட்-டவுன் WP அபெக்ஸ் முன்புற ஃபோர்க்குகள், 10-ஸ்டெப் அட்ஜஸ்ட் வசதி கொண்ட WP ரியர் மோனோ ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேகிங்கிற்கு முன்yபுறம் ஒற்றை 320mm டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை 230mm டிஸ்க் உள்ளது. இந்த மாடலிலும் 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மோட்டார்சைக்கிள் கேலக்டிக் புளூ மற்றும் டார்க் கல்வேனோ பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிஎம்டபிள்யூ G 310 GS மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • யமஹா நிறுவனத்தின் 2023 R3, MT 03 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    • இரு மாடல்களின் முன்பதிவு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் ஆகும்.

    இந்தியா முழுக்க இயங்கி வரும் யமஹா நிறுவன விற்பனையாளர்கள், 2023 R3 மற்றும் MT 03 மாடல்களுக்கான முன்பதிவுளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இரு மாடல்களும் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் 2023 யமஹா R3 மற்றும் யமஹா MT 03 மாடல்கள் விற்பனையாளர்களிடையே நடத்தப்பட்ட நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இவை தவிர YZF R7 மற்றும் MT 07 மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

     

    இதன் காரணமாக இந்த மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய யமஹா R3 மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC390, கவாசகி நிஞ்சா 300, டிவிஎஸ் அபாச்சி RR310 மற்றும் கீவே K300 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 2019 வரை இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

    யமஹா MT 03 மோட்டார்சைக்கிள் R3 மாடலின் நேக்கட் வெர்ஷன் ஆகும். இது முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கேடிஎம் 390 டியூக், பிஎம்டபிள்யூ G310 R மற்றும் கீவே K300 N மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 ஹெரிடேஜ் கிளாசிக் மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய 2023 ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் கிளாசிக் மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஹெரிடேஜ் கிளாசிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹெரிடேஜ் கிளாசிக் மாடல்: விவிட் பிளாக், பிராஸ்பெக்ட் கோல்டு, பிரைட் பில்லியர்ட் புளூ மற்றும் ஹெய்ர்லூம் ரெட் ஃபேட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2023 ஹாரிலி டேவிட்சன் ஹெரிடேஜ் கிளாசிக் விலை விவரங்கள்:

    120 ஆனிவர்சரி மற்றும் க்ரோம் எடிஷன் ரூ. 27 லட்சத்து 49 ஆயிரம்

    விவிட் பிளாக் மற்றும் பிளாக் ஃபினிஷ் ரூ. 26 லட்சத்து 59 ஆயிரம்

    பிராஸ்பெக்ட் கோல்டு மற்றும் பிளாக் ஃபினிஷ் ரூ. 26 லட்சத்து 78 ஆயிரம்

    டூ-டோன் மற்றும் பிளாக் ஃபினிஷ் ரூ. 27 லட்சத்து 29 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    புதிய ஹெரிடேஜ் கிளாசிக் மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 94 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி பைக் 5.5 லிட்டர்கள் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 49mm டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் மற்றும் ஹைட்ராலிக் பிரீலோட் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி இலுமினேஷன், அனலாக் கன்சோல், டிஜிட்டல் இன்செட் உள்ளது. 

    ×