search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டப்பாவாலாக்கள்"

    உலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas
    மும்பை:

    சுடச்சுட நமது மனைவி அல்லது தாயார் கைகளால் அன்பொழுக சமைக்கப்பட்ட சாப்பாட்டை வீடு தேடி வந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்ப்பதுதான் டப்பாவாலாக்களின் வேலை. இதற்காக மாதாமாதம் ஒரு தொகையை இவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

    இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு தனியாக சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ. பாடங்களில் கூட ‘பொருளை துல்லியமாக கொண்டு போய் சேர்ப்பது மற்றும் நேரம் தவறாமை’ ஆகிய தலைப்புகளில் டப்பாவாலாக்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளனர்.

    அந்த நபர், ரெயில், பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் என எந்த வழியிலாவது சென்று மதியத்திற்குள் ‘டிங் டாங்’ என சேர வேண்டிய இடத்தில் சாப்பாடு கேரியர்களை சேர்க்கின்றார்.

    கேரியரை உரியவரிடம் சேர்ப்பதோடு அவர்களின் பணி முடியவில்லை. வாடிக்கையாளர் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கேரியரை பெற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் ஒப்படைக்கிறார்கள். போக்குவத்து நெரிசல், மழை, வெள்ளம் என எந்த இடர்பாடுகள் வந்தாலும் டப்பாவாலாக்கள் சேவையில் சோர்ந்து போனதே கிடையாது.


    சுமார் 60 கி.மீ சுற்றளவில் இயங்கும் டப்பாவாலாக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் சாப்பாடு கேரியர்களில் கையாளுகின்றனர்.

    “அடேங்கப்பா! 2 லட்சமா, கேரியர் மாறி வேறு ஆட்களிடம் சேர்ந்து விடாதா?” என கேட்கிறீர்களா. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் என ரகசிய குறியீடுகளை சாப்பாடு கேரியரின் எழுதி வைத்துள்ளனர்.

    தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் அடையாள அட்டை, செல்போன், எஸ்.எம்.எஸ். என தங்களை அப்டேட் செய்து கொண்ட டப்பாவாலாக்கள் ஆரம்ப காலம் முதல் கொண்ட செயல் முறையை இன்னும் மாற்றவே இல்லை.
    எல்லாவற்றிலும் புகுந்துள்ள புதுமை யோசனைகள் இந்த டப்பாவாலாக்களின் செயல் முறையையிலும் ஒரு புரட்சியை தற்போது கொண்டு வந்துள்ளது.

    சாப்பாடு மட்டுமல்ல பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சங்கம் மூலமாக நடந்து வருவதாகவும், விரைவில் சேவை தொடங்கப்படும் என டப்பாவாலாக்கள் தெரிவித்துள்ளனர்.
    ×