search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    உடுமலை:

    2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 15 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவி பாண்டீஸ்வரி புள்ளியியல் துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், மின் வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    இதுதவிர தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், கே.ரமணி 10-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி அா்ஸ்மா 7-ம் இடத்தையும், வேதியியல் துறையில் மாணவன் பொன் ஜீவகன் 6-ம் இடத்தையும், தமிழ் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவன் பத்மநாதன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வேதியியல் துறையில் மாணவன் கிஷோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் வென்றுள்ளனா். பொருளியல் துறையில் மாணவி பி.அபிதா 5-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி கே.அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்நிலையில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் கல்யாணி மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

    இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    .

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு.
    • வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் நிர்வாகம் வசூலை குவித்து உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு. விடுமுறை காலங்களில் ரூ.175 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மது பானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    மது அருந்துபவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகைக்காக மது குடித்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக மது குடிப்பவர்கள் என பல காரணங்களால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களாக விற்பனைகளை கட்டியது. இதில் ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

    இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது. மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர்.

    இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது.

    கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

    • 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார்.
    • மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்தார்.

    தென்காசி:

    தென்காசி அச்சம்பட்டியில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஜீடோ போட்டி நடைபெற்றது.

    இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜேக்கப் ஜாய் குமார் 2-ம் இடமும், ஜெபின் 3-ம் இடமும் பெற்றனர். அதேபோன்று தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜே.வே.பெல், செயலாளர் கஸ்தூரி பெல்,முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    • தேசிய சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர்

    ராமநாதபுரம்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசாள் மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச் சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர் இப்போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள் ஆகிய 3 பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர். 56 தங்கப்பதக்கம், 34-வெள்ளி பதக்கம், 5- வெண்கலப் பதக்கம் வென்று ஓவரால் சாம்பியன் கோப்பையினை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர்கள் திருமுருகன், ஜெயஸ்ரீ, செல்லபாண்டி, பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.
    • இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிக் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இன்று குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட் தலைவர் முகமது சாபீர் ஒருங்கிணைத்தார்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாண விகள் கலந்து கொண்டு இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.

    இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது. சிலம்பம் சுற்றியவர்களை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    மேலும் அவர் சாதனை படைத்த தற்கான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நவ பாரத் மெட்ரிக் பள்ளி பிரின்சிபல் ஜான்சன், அட்மினேஸ்டர் குணாசிங், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சீப் ஆப்பரேட்டிங் ஆபிஸர் வினோத், தீர்ப்பாளர் பரத் குமார், கேரளா யு.எஸ்.எம்.ஏ. கிராண்ட் மாஸ்டர் குங் நியாஸ், பொதுச் செயலாளர் மார்க்கர், ஏ.ஐ.கே.ஏ. துணைத் தலைவர் ரெனால்ட் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
    • 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.

    பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.

    தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.

    மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • நாகர்கோவிலில் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. விழா வுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். கலெக்டர் ஸ்ரீதர் வர வேற்றார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 27 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாடே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.27 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர்.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14-ந் தேதியே அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு.

    இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்ப டும் என வாக்கு றுதிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

    எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தும் போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கப்படாத வர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடு பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல் பட்டு வருகிறோம்.

    மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் எனும் உயரிய எண்ண த்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்க இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பதியாகத்தான் தற்போது இங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் 25 ஆயிரம் பேருக்கு ரூ. 27 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியுள்ளோம்.

    பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞர் அதை செய்தார். கலைஞரை தொடர்ந்து முதல்-அமைச்சரும் மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

    பெண்கள் முன்னேற்றம் 3 வழிகளில் தடுக்கப்பட்டி ருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. 2, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது. 3, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது.

    இந்த 3 தடைகளை யும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்படும் என்று பெரியார் சொன்னார்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது.

    இவற்றை எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்று வதற்கான திராவிட மாடல் திட்டங்கள்.

    2-வதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது.

    ஆனால், கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்..இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தான்.அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன?

    ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்தி ற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை.

    இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டு மானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும். தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும்.

    நாட்டிலேயே முதல்முறையாக கலைஞர் 1989-ம் ஆண்டே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார். கலைஞர் வழியில், திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது.

    படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

    இதுவரை நமது அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களி லேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.

    இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்.

    பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ண னாக இருந்து முதல்-அமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்தி ருக்கிறார். உங்களுடைய மகனாக, – சகோதரனாக இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.

    பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்தி கள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா? பொய்யா? என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்ற வர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.

    இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கி றார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், –பேரூராட்சித் தலைவர், – மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், – ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவி களில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது திராவிட மாடல் அரசு.

    பெண்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டு கோளை வைக்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறி வுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.

    அப்போது தான் உங்க ளுக்கு பிறக்கும் குழந்தை களும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பா ர்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும்.

    ஆண்களை விட பெண்கள் தான் தங்களு டைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.

    எனவே, பொருளா தாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டு மொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.

    இங்கு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கும், – மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனு தவியை, முதல்-அமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. மாறாக சுய உதவிக் குழு சகோதரிகளின் உழைப்பிற்கான நம்பிக்கைத் தொகை யாகத் தான் பார்க்கிறார்கள்.

    தி.மு.க. அரசின் சாதனை களை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் தூதுவர்களாக மாறிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார். முடிவில் வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.விழாவில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை
    • டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    பொன்னமராவதி 

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் திருக்களம்பூரை சேர்ந்த ஷகிலாபானு, கருப்புக்குடிப்பட்டி சுகந்தி, வார்பட்டு பகுதியை சேர்ந்த அழகி, கருப்பர்கோயில்ப ட்டியை சேர்ந்த புவனே ஸ்வரி ஆகியோர் பிரசவத்தி ற்காக ஒரே நேரத்தில் அனு மதிக் கப்பட்டிருந்தனர்.

    இவர்களுக்கு டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    அப்போது 3 பேருக்கு ஆண்குழந்தையும் ஒரு வருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    ஒரே நேரத்தில் 4 பிரசவ ங்களை பார்த்து சாதனை படைத்த மருத்துவக் குழுவி ற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவி த்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாத னையை அறிந்த மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் மருத்து வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    அதேபோன்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்களை பார்த்த மருத்துவர்களை பாராட்டியும்.குழந்தைகளை ஈண்றெடுத்த தாய்மார்க ளுக்கு டாக்டர் அருள்மணி நாகராஜன் குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை வழ ங்கி வாழ்த்துகளை தெரிவி த்தார்.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் பூபதிராஜன், பிறப்பு பதி வாளர் உத்தமன், மருந்தா ளுநர் அன்பரசி, செவிலி யர்கள் சீதா, அம்பிகா, சூர்யா, ஆய்வக சீமா, சுகா தார ஆய்வாளர் பிரேம்கு மார், மருத்துவமனை உதவியாளர் செல்வி உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    • புன்னம் சத்திரத்தில் 2 மணி நேரம் சிலம்பு சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்
    • மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பொன்னும் சத்திரம் சேரன் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து சிலம்பு சுழற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து வயதுக்கு மேல் உள்ள 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்ஐஸ் கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றுவது, சைக்கிளில் சுற்றிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, பானையின் மீது நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, முட்டை அட்டியின் மேல் நின்று சிலம்பம் சுற்றுவது, ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுவது என சுமார் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் சுரேஷ், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்திக், எக்ஸ்போ பிரைட் கிளை மேலாளர் சிவக்குமார் , கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வீரதிருப்பதி, பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சௌந்தரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    ×