என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சருமம்"
- இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து போட்டு வரும் போது சருமத்தின் நிறம் மாறுவதை காணலாம்.
- இன்று பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.
எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.
ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.
தேவையான பொருட்கள்:
பால்பவுடர் - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும். நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.
- லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை.
- நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நமது தினசரி உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, நவீன தொழில்நுட்பங்கள் முதலியவை பலவிதமான தீமைகளை விளைவிக்கின்றது. இன்று பெரும்பாலான பெண்களின் முகம் மற்றும் சருமத்தில் அதிக முடிவளர்ச்சியோடு காணப்படுவதால், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை அவர்கள் இழந்து தங்களது சுயதிறமைகளை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்த இயலாமல் பின்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய முடிவளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் தேவையற்ற முடிவளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கலாமா?, குறைக்கலாமா? என்று சந்தேகமும், அச்சமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆம்! நிச்சயமாக இதிலிருந்து ஒரு விடுதலை பெறமுடியும். டயோட் லேசர் சிகிச்சை எனப்படும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தேவையற்ற முடியை அகற்ற முடியும்.
லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இந்த லேசர் கதிர் என்பது சருமத்தில் உள்ள மெலானின் எனப்படும் குறிப்பிட்ட க்ரோமாபோரிளை தாக்கி அதனை செயலிழக்க செய்கிறது. இதனால் முடிவளர்ச்சி மற்றும் புதிய முடி வளர்வதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சாதாரண திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதனை எத்தனை அமர்வுகளில் சரி செய்யலாம் என பலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவருக்கும் முடியின் தடிமனை பொருத்து வேறுபடலாம். சிலருக்கு 6 அமர்வுகளும், சிலருக்கு அதற்கு மேலும் மாறுபடலாம். சிகிச்சையின் நிறைவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நம் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த நிச்சயமாக இயலும்.
அதே சமயம் நமது ஹார்மோன் குறைபாடுகளை மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்று சீராக கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு சிறந்தது என ஜெருஷ் மருத்துவமனை டாக்டர் பிளாட்பின் தெரிவித்தார்.
டாக்டர் பிளாட்பின், பெனிலா பிளாட்பின்
- குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது.
- தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.
சருமத்தில் உள்ளநீர் மற்றும் இயற்கை எண்ணெய்களின் ஈரப்பதம் குறையும் போது அரிப்பு ஏற்படுகிறது. குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் வெப்பமாக்கல் போன்றவை சருமத்தின் ஈரப்பதம் குறைய முக்கிய காரணமாகும்.
பிற சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றாலும் வறண்ட சருமத்தை உண்டாக்கி சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும்.
தோல் அலர்ஜி:
வறண்ட தோல் ஆனது உலர்ந்த அரிப்பு மற்றும் திட்டுகளை ஏற்படுத்தும். இது முறையற்ற செல் சுழற்சி (Inproper cell Turn over) அல்லது கடுமையான இரசாயனங்கள், ஒவ்வாமை அல்லது கிருமி தொற்று ஆகியவற்றால் ஏற்படலாம்.
ரோசாசியா இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.
குளிர் அர்டிகேரியா
Cold Urticaria
குளிர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் புடைப்புகள் உண்டாக்குகின்றது. சிலருக்கு குளிர்ந்த நீரில் நீந்திய பிறகு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு குளிர்ந்த காற்றால் உண்டாகலாம். இதனால் ஏற்படும் அரிக்கும் உணர்வானது தற்காலிகமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்.
சொரியாசிஸ்:
இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுவதாகும். (Auto Immuno Disease) தடி மனான சிவப்பு செதில் போன்ற சரும திட்டுகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தில் வெடிப்பு, எரிச்சல் மற்றும் மூட்டுகளில் விரைப்பு ஆகிய வற்றையும் ஏற்படுத்தும்.
Dermatitis / Eczema:
குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது. குளிர்ந்த வெப்பநிலைக்கு அதிகம் வெளிப்படும் கைகள் மற்றும் கால்களில் அதிகம் பாதிக்கலாம். இது சருமத்தில் சிவப்பு, அரிப்பு, கரடு முரடான செதில் திட்டுகள் அல்லது கொப்புளங்கள் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
Wind burn / Winter itch
குளிர்ந்த காற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் குளிர்காற்றில் வெளியில் செல்ல நேரும் போது கையுறை மற்றும் துணிகளால் கைகளை மற்றும் வெளிப்படும் தோலை மூடும் போது இந்த பாதிப்புகளை குறைக்கலாம்.
உலர்ந்த/வெடித்த உதடுகள்:
குளிர்ந்த காலத்தில் பெரும்பான்மையானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை உலர்ந்த மற்றும் வெடித்து ரத்தம் வரும் உதடுகள் ஆகும். Lip balms with SPF கொண்ட களிம்புகளை உபயோகிக்கும் போது இதனை குறைக்கலாம்.
குளிர்காலத்தில் தோல் சிகிச்சையில் சருமத்தை மீண்டும் ஈரமாக்குவதிலும் எரிச்சலை தணிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சருமத்துக்கு மாய்ஸ்ரைஸர்கள், எண்ணைகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.
அதே நேரம் ரோசாசியா, சொரியாசிஸ், எக்ஸிமா, தெர்மோடைடுஸ் போன்ற சரும பாதிப்பை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Dr. TAMILARASISHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist.
- இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.
- இளநரையைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயமானது பெண்களுக்கு சரும மற்றும் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை தருகிறது.
வெந்தயத்தை நீரில் நன்றாக ஊறவைத்து, அரைத்து முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவிவர முகம் பொலிவு பெறும். பாலுடன் சேர்த்து அரைத்தும் முகத்தில் பூசி வரலாம். இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அந்த நீரினைக் கொண்டு முகத்தினை கழுவிவர சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குவதோடு தோலிற்கு ஈரப்பதத்தையும் தருகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின்-சி முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, முகச்சுருக்கத்தினை குறைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க, முடிஉதிர்வை கட்டுப்படுத்துவதோடு, முடியின் வறட்சி தன்மையை நீக்கி, மிருதுவைத் தரும்.
வெந்தயத்தை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்திவர முடிஉதிர்வைத் தடுக்கும்.
தலையில் பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பு காணப்பட்டால் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் தயிருடன் கலந்து அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகுத் தொல்லை படிப்படியாகக் குறையும்.
ஊறவைத்த வெந்தயத்தினை கறிவேப்பிலை உடன் சேர்த்து அரைத்து தலையில் பூசிக் குளித்து வர இளநரையைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை ஊறவைத்து, தேங்காய் பாலுடனோ அல்லது சிறிதளவு தேங்காய் எண்ணைய்யுடனோ அரைத்து தலையில் பூசி குளித்து வர கேசத்தின் வறட்சி நீங்கி மிருது தன்மை அடையும்.
- இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது.
- இந்த பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…
நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான சரும தங்க குளியல் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…
இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. முக்கியமாக பருக்கள், தழும்பு, கரும்புள்ளி போன்ற எந்த விதமான தோல் அலர்ஜியையும் குணப்படுத்தும்.
செய்முறை
ரோஜா பூ - 1 கப்
ஆவாரம் பூ - 1 கப்
பச்சை பயிறு - அரை கப்
கஸ்தூரி மஞ்சள்- அரை கப்
பூலான் கிழங்கு பொடி - 2 டீஸ்பூன்
மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
இப்போது அருமையான தங்க குளியல் பொடி தயார்…
இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.. மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..
பயன்படுத்தும் முறை
இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.. ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்…
- நேரத்திற்கு தூங்குவது கிடையாது.
- நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது.
சில பேருக்கு 25 வயதைக் கடந்த உடனேயே வயதான தோற்றம் வர தொடங்கிவிடும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட தொடங்கும். கண்களுக்கு கீழே தோல் சுருங்கி இருக்கும். வாயை சுற்றி சுருக்கம் வரத் தொடங்கியிருக்கும். கழுத்தில் சுருக்கங்கள் அதிகமாக வரத் தொடங்கும்.
முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.
வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் பயிறு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க..
மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.
- பெண்களுக்கு முகத்தில் வளரும் முடியால் அவர்களின் அழகு கெடும்.
- முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள் இதோ...
ஹார்மோன் கோளாறு மற்றும் சில குறைபாடுகள் காரணமாக சில பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். இவ்வாறு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள்:
குப்பைமேனி பொடி, கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சுட்ட வசம்பு பொடி இவைகளை சம அளவில் எடுத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து முகத்தில் பூசி 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
மாவுச் சத்து அதிகமான உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்க்கலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள அவரை, கொத்தவரை, பீன்ஸ், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், கோவைக்காய், பூசணிக்காய், பிரண்டைத் தண்டு, கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, நூல்கோல், ப்ராக்கோலி, கம்பு, சாமை, வரகு, தினை, குதிரை வாலி, சோளம், கேழ்வரகு, சிவப்புக் கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப்பயறு, கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- காபியில் பல நன்மைகள் உள்ளன.
- முகப்பருவைக் குறைக்கிறது.
காபியில் சருமத்தைப் பொலிவாக்கும் அற்புதமான பண்புகள் உள்ளன. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
காபியில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் ஒன்று தோல் பராமரிப்பு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, அற்புதமான சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
காபி மற்றும் பால் முகமூடியைத் தயாரிக்க, இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால், காபி மற்றும் பால் முகமூடி ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.
ஒரு தேக்கரண்டி காபி தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து பேஸ்ட்டை உங்கள் முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் விடவும். பேஸ்ட்டை அகற்ற, மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும், சருமம் பளபளப்பாக இருக்கும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள மந்தமான தன்மையை நீக்கி கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் காபி பவுடரை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகவும் மென்மையாகவும் தடவவும். 15 நிமிடம் உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது.
- ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது.
- பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும்.
ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
* ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.
ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப்
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
* ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
1 ஆப்பிள் தோல், 1 டீஸ்பூன் தேன்
ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் மாஸ்க் பிம்பிள் தழும்புகளையும், கருமையான புள்ளிகளையும் குறைக்கும். நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு, இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.
ஆப்பிள் - 1, தேன் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஆப்பிளை துருவி அதிலிருந்து சாற்றினை கையால் பிழிந்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- வைட்டமின் ஈ எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம்.
- வைட்டமின் ஈ எண்ணெயை சருத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.
இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.
கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவளைம் நீங்கும்.
இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ எண்ணெயை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.
கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை மாய்ஸ்சரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.
- சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
- சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.
ஃபேஸ் பேக்குகளில் கிரீன் டீயை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பளபளக்கச் செய்கிறது. கிரீன் டீ சருமத்தில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதனால் எளிதில் அல்லது இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தினை தடுக்கிறது. கிரீன் டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கரு வளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கிரீன் டீயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைத்து வடுக்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும் போது சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளைச் சரி செய்கிறது.
இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.
அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.
- கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.
- பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம்.
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.
க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம்
அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.
அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்.
கருவளையம் நீங்க அன்னாசி
அதிகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.
அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.
ஆரோக்கியமான நகங்களுக்கு அன்னாசி
நகங்கள் அதிகமாக வறட்சியாவது, உடைதல் போன்ற பிரச்சினைகள் சிலருக்கு அடிக்கடி ஏற்படும். நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு வைட்டமின் ஏ மற்றும் பி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
நகங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசி பழச்சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பைனாப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல அந்த சாறினை நகங்களில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நகங்கள் உறுதியாகவும் அழகாகவும் மாறும்.
அழகான பற்களுக்கு அன்னாசி
அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி பற்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது.
முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் மஞ்சள் கறை இல்லாமல் பளிச்சென வெண்மையாக இருந்தால் தான் முகத்தின் பளபளப்பு இன்னும் கூடும். இதற்கு அன்னாசி பழம் மிக உதவியாக இருக்கும்.
அன்னாசி பழத்தின் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதை டூத் பிரஷில் தொட்டு நன்கு பல் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும். பற்கள் முத்து போல ஜொலிக்கும். அடிக்கடி செய்தால் இதிலுள்ள அமிலத்தன்மை பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்