என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 221563
நீங்கள் தேடியது "விமானம்தாங்கி"
சீனா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது. இந்த கப்பல் நேற்று டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. #China #Aircraft
பீஜிங்:
சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.
இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.
கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.
சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. #China #Aircraft

×

X