என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் பறிப்பு"
- கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை
- திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை வ.உ.சிநகர் பகுதியில் வசிப்பவர் ரத்னசிங். எலக்ட்ரீசியன். இவரது மகன்கள் சதீஷ்சிங் (வயது 23), சந்து ருசிங் (21) ஆகியோர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் புறப் பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கீழ்பென்னாத்தூர் இந் திரா நகர் பை-பாஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), அங்குள்ள சமத் துவபுரத்தில் வசிக்கும் தியாகராஜன் (20), சதீஷ்குமார் (19) ஆகியோர் இவர்களிடம் செல்ாேன்களை பித்து விட்டு தப் பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங்கிடம் செல்போன்களை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கர வர்த்தி ஆகியோர் கைது செய்து செல்போன்களை மீட்டனர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
- கூட்ட நெரிசலில் துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அகன் நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் இவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து அருள்ராஜ் அரக்கோணம் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடி சென்ற நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடைமேடையில் சுற்றி திரித்து கொண்டிருந்த வாலிபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை திருவூர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 25) என்பதும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரீதாவிடம் சென்று முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பினர்.
சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மார்கபந்து. இவரது மகள் பிரீதா, கல்லூரி மாணவி. இவர் அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
பிரீதா நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரீதாவிடம் சென்று முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பிரீதாவின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேர் கைது
- செல்போன், பைக் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பரித்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 19). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார்.
செல்போன், பணம் பறிப்பு
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஜீவாவிடம் இருந்து பணம் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து ஜீவா அரக்கோணம் டவுன் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப் பதிவு செய்தார்.
இதைதொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரக்கோணம் - காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையின் போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் அரக்கோணம் கிருஷ் ணாம் பேட்டையை சேர்ந்த முகமது உசேன் (27), கருமாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (24) என்பதும், ஜீவாவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்த அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சபரிநாதன் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
- 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர்
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 27). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று குனியமுத்தூர்-சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சபரிநாதன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
- ஆட்டோவில் வந்து துணிகரம்
- 3 பேர் கைது
வேலூர்:
வேலூரை அடுத்த இடையன் சாத்து பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 25). இவர் நேற்று சித்தேரியில் இருந்து இடையஞ்சாத்து செல்லும் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் திடீ க ரென சத்தியமூர்த்தியை வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் சத்தியமூர்த்தியிடம் செல்போன் பறித்தது சேண் பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் (24), தொரப்பாடியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), சின்ன சித்தேரியை சேர்ந்த கோபிநாத் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீ சார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்போனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உமா சங்கர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.
- 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்து செல்போனை பறித்தனர்.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி ரோடு மலுமிச்சம்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது51) பிளம்பர் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த வேலை காரணமாக சுந்தராபுரம் வந்துவிட்டு திரும்பி மலுச்சம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றர். இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உமா சங்கர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் செல்போன் பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை இழந்த பொதுமக்கள் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, திண்பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிட்டனர்.
கார், இரு சக்கர வாகனங்கள், வேன் போன்றவற்றில் மெரினாவில் குவிந்த மக்கள் இரவு வரை பொழுதை கழித்தனர். இளம் தம்பதிகள், காதல் ஜோடிகள் என கூட்டம் கூட்டமாக அமர்ந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.
கூட்ட நெரிசலை போலீசார் கேமரா மூலம் கண்காணித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டன. மெரினாவில் இருந்த மோட்டார் சைக்கிளும் திருடு போய்விட்டது. இது தவிர ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டுடன் மணி பர்சையும் வழி பறித்து சென்றனர்.
செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை இழந்த பொதுமக்கள் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- மர்ம நபர் ஒருவர் விவேக்கின் செல்போனை பறித்து கீழே தள்ளினார்.
- மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு துரிதமாக உதவிய சமூக ஆர்வலர் வெங்கடேசனை பொது மக்களும் ரெயில்வே போலீசாரும் வெகுவாக பாராட்டினர்.
ராயபுரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (24) சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
பணி நிமித்தமாக மதுரை சென்று பின்னர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லக்கூடிய கோர மண்டல் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.
கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது விவேக் குமார் ரெயிலின் கதவு ஓரத்தில் செல்போன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது தீடீரென மர்ம நபர் ஒருவர் விவேக்கின் செல்போனை பறித்து கீழே தள்ளினார். கீழே விழுந்த விவேக் தனது செல்போனை திருடி சென்றதாகவும், தனது உடமைகள் சான்றிதழ்கள் ரெயிலில் இருப்பதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசனிடம் கூறினார்.
அவர் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஓங்கோல் பகுதியில் ரெயில்வே போலீசார் விவேக் உடமைகளை எடுத்து வைத்து அவரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சிறிது தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே சத்தம் கேட்கவே அதனையும் எடுத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து விவேக் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் சென்று உடமைகளை எடுத்து கொண்டு பின்னர் விஜயவாடாவுக்கு சென்றார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு துரிதமாக உதவிய சமூக ஆர்வலர் வெங்கடேசனை பொது மக்களும் ரெயில்வே போலீசாரும் வெகுவாக பாராட்டினர். மேலும் இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் விவேக்குமார் புகார் செய்துள்ளார்.
- மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது வீட்டுக்கு செல்ல பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். மேலும் சேக்குப்பேட்டை கவரை தெரு அருகே வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து செல்போன்களை பறிகொடுத்த இருவரும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் பழைய ரெயில்வே ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக அவர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த புருஷோத் (19) திருக்காலிமேட்டை சேர்ந்த சூர்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
- டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவ பாபு(வயது26). லாரி டிரைவர். இவரது லாரியின் கிளீனர் சூரஜ்(20). இருவரும் டெல்லியில் இருந்து இன்வெர்ட்டர் பேட்டரி லோடுகளை ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு கடந்த 25-ந் தேதி லாரியில் புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு கப்பலூர் சிட்கோவுக்கு லாரி வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிட்கோவில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டுக்கு சென்றார்.
சாப்பிட்டு விட்டு இருவரும் மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சா்வீஸ்ரோடு அருகே நடந்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென்று இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.
பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை கும்பல் பறித்து கொண்டு மர்மகும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.
காயமடைந்த சிவ பாபு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம்-செல்போன்களை பறித்து சென்றவர்கள் யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி
- சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்ஸில் கூட்டமாக பயணிகள் ஏறும்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோத கும்பல் நைசாக பயணிகளிடம் இருந்து செல்போன், மணி பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடி செல்கின்றனர்.
அவசரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இது குறித்து போலீசில் புகார் செய்வது இல்லை.
இந்த நிலையில் இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த ஒருவரின் செல்போனை மர்ம கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்று விட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்ட இருக்கைகளில் சமூக விரோதிகள் அமர்ந்து கொள்வது படுத்துக் கொள்வது என ஆக்கிரமிப்பு செய்வதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பயணிகளில் உடைமைகளை பாதுகாக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே இருந்த புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து நிரந்தரமாக போலீசார் பணியாற்றி வந்தனர்.
ஆனால் தற்போது புதிய பஸ் நிலையத்திற்குள் போலீசார் யாரும் வந்து வராததால் சமூக விரோத கும்பல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் சமூக விரோத கும்பலை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.