search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை"

    வடகொரியா மேற்கொண்ட அணுகுண்டு சோதனையின் தாக்கத்தால் அங்குள்ள ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் ‘மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியது.

    அதனால் அப்பகுதியில் 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.

    மேலும் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் சில மாதங்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சோதனை நடத்தப்பட்ட ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது என்றும், சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.

    ‘மேன்டேப்’ மலைப் பகுதியின் சோதனைக் கூடம் தற்போது செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. அதனால் தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதைமூட இருப்பதாக நாடகமாடுகிறார் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

    ஏற்கனவே சேதமடைந்து இனி பயன்பாட்டிற்கு உதவாத சோதனை கூடத்தை உலக நிபுணர்களின் முன்னிலையில் மூடுவிழா நாடகத்தை அவர் நடத்த இருப்பது அரசியல் தந்திரமாக கருதப்படுகிறது. #tamilnews

    ×