search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது.
    • ஒரு கிராம் ரூ.4,715-க்கும், சவரனுக்கு ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 28-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்கப்பட்டது. அது நேற்று முன்தினம் ரூ.37,640 ஆக குறைந்தது. நேற்றும் அதேவிலையே நீடித்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,720-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,705-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,715-க்கு விற்கப்படுகிறது.

    இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

    • பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.
    • பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.

    • தங்கம் விலை இன்று கிராம் ரூ.30-ம் சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து உள்ளது. ஒரு கிராம் ரூ.4,705-க்கும் சவரன் ரூ.37,640-க்கும் விற்பனை ஆகிறது.
    • வெள்ளி கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ.63 ஆகவும் கிலோ ரூ.63,700-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,735-க்கும், பவுன் ரூ.37,880-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.30-ம் பவுன் ரூ.240-ம் குறைந்து உள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.4,705-க்கும் பவுன் ரூ.37,640-க்கும் விற்பனை ஆகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் சரிந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ.63 ஆகவும் கிலோ ரூ.63,700-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து இருக்கிறது.

    • வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்து இருக்கிறது.
    • கிராம் ரூ64.50-ல் இருந்து ரூ.63.50 ஆகவும். கிலோ ரூ.64,500-ல் இருந்து ரூ.63,500 ஆக குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தது. நேற்று பவுன் ரூ.38,120 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று பவுன் ரூ.160 குறைந்து ரூ.37,960-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.4,765-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,745 ஆக குறைந்து உள்ளது.

    தங்கம் இன்று ஒரே நாளில் கிராம் ரூ.20 குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ64.50-ல் இருந்து ரூ.63.50 ஆகவும். கிலோ ரூ.64,500-ல் இருந்து ரூ.63,500 ஆக குறைந்து உள்ளது.

    • பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
    • விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில்,சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு மானாவாரி சாகுபடியாக மட்டும் கொத்தமல்லி வடகிழக்கு பருவமழையின் போது சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொத்தமல்லி தேவை அதிகரிப்பால் கொத்தமல்லி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.கொத்தமல்லி சாகுபடிக்கு அதிக செலவு பிடிப்பதில்லை.மேலும் திருமண முகூர்த்த காலங்களில் நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் கொத்தமல்லி சாகுபடி பரப்பு பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் விலை உயர்வால், ஒரு கட்டு கொத்தமல்லி விலை 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில்,கடந்த ஆவணி மாதத்தில் சாகுபடி செய்த கொத்த மல்லி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் தொடர் மழை இல்லாததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.5க்கு விலைக்கு விற்பனையாகிறது. சில நேரங்களில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    • பிச்சி பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை
    • நாளை தீபாவளி பண்டிகை

    கன்னியாகுமரி:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும், பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களா கவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையா கவும் வாங்குவதற்கு ஏராள மானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபா ரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:-

    பிச்சி ரூ.1400, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1250, சேலம் அரளி ரூ.250, சம்மங்கி ரூ.100, பட்டர் ரோஸ் ரூ.180, மஞ்சள் மற்றும் சிகப்பு கேந்தி ரூ,60, கொழுந்து ரூ.110, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.35.

    • தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும் விலை போனது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை பயிரிட்டுள்ளனர்.நன்கு விளைந்த வாழைத் தார்களை வெட்டி, உள்ளூர் பகுதி வியாபாரிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்ச நாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550-க்கும் விற்பனை ஆனது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கும் விற்பனை ஆனது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு.
    • பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், நாகப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் குண்டுமல்லிகை ரூ.400- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- க்கும், முல்லை ரூ.400- க்கும், செவ்வந்தி ரூ.150- க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லை கிலோ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு அடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
    • பெண்கள் தங்கம் வாங்குவதற்கான உற்சாகத்தில் இருந்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை பட்டாசு, இனிப்புகளுடன் தங்க நகை வாங்கியும் கொண்டாடுவது வழக்கம்.

    தீபாவளிக்கு தங்கம் வாங்கி பூஜை செய்து கேதாரி நோன்பு இருந்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    எனவே பொதுமக்கள் பலரும் தீபாவளிக்காக தங்கம் வாங்க முடிவு செய்திருந்தனர். தற்போது பலர் தங்கம் வாங்க தொடங்கி விட்டனர்.

    அதற்கு ஏற்ற வகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதனால் பெண்கள் தங்கம் வாங்குவதற்கான உற்சாகத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்கை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கம் விலை இன்று திடீரென்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 13-ந்தேதி பவுன் தங்கம் ரூ.38,080-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது. 15-ந்தேதி ரூ.37,520 ஆனது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.37,480 ஆக குறைந்தது. நேற்று மீண்டும் குறைந்து ரூ.37,320-க்கு விற்கப்பட்டது.

    ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்திருப்பதால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,665-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,200-க்கு விற்கப்படுகிறது.

    • பரமத்தி வேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • வெற்றிலை உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து, தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா ,கர்நாடகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் க டந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ.6,500-க்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2,700-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.2000-க்கும் , 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1000-க்கும் விற்பனையானது.

    நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8600-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3600-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4100க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1200-க்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்து உள்ளது.
    • கிராம் ரூ.61-ல் இருந்து ரூ.61.50 ஆகவும். கிலோ ரூ. 61 ஆயிரத்தில் இருந்து ரூ. 61,500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது. நேற்று கிராம் ரூ.4,685க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,665-க்கு விற்பனை ஆகிறது. பவுன் ரூ.37,480-ல் இருந்து ரூ.37,320 ஆக குறைந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.20-ம் பவுன் ரூ.160-ம் குறைந்து உள்ளது.

    வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.61-ல் இருந்து ரூ.61.50 ஆகவும். கிலோ ரூ. 61 ஆயிரத்தில் இருந்து ரூ. 61,500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    • தங்கம் இன்று ஒரே நாளில் கிராம் ரூ 15-ம், பவுன் ரூ 120-ம் குறைந்தது.
    • வெள்ளி விலையும் சரிவை சந்தித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ 4,700-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ4,685 ஆக குறைந்தது. பவுன் ரூ37,600-ல் இருந்து ரூ37,480 ஆக குறைந்து உள்ளது.

    தங்கம் இன்று ஒரே நாளில் கிராம் ரூ 15-ம், பவுன் ரூ 120-ம் குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்து உள்ளது.

    கிராம் ரூ. 61.50-ல் இருந்து ரூ.61 ஆகவும், கிலோ ரூ. 61.500-ல் இருந்து ரூ. 61 ஆயிரமாகவும் குறைந்து இருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தங்கம் விலை குறைந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

    ×