search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4,700-க்கும், ஒரு சவரன் ரூ.37,600-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37 ஆயிரத்து 600-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 700 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலை சற்று அதிகரித்து உள்ளது.
    • கிராம் ரூ.60.50ல் இருந்து ரூ.60.70 ஆகவும், கிலோ ரூ.60,500ல் இருந்து ரூ.60,700 ஆகவும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,690 ஆக விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,700 ஆக அதிகரித்து உள்ளது.

    பவுன் ரூ.37,520-ல் இருந்து ரூ.37,600 ஆக உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.10ம், பவுன் ரூ.80 ம் உயர்ந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் சற்று அதிகரித்து உள்ளது. கிராம் ரூ.60.50ல் இருந்து ரூ.60.70 ஆகவும், கிலோ ரூ.60,500ல் இருந்து ரூ.60,700 ஆகவும் உயர்ந்துள்ளது.

    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்பட்டது.
    • இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.62,30-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,680-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.38,720 ஆக உயர்ந்தது. 7-ந்தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.38,680-க்கு விற்றது.

    8-ந்தேதி மீண்டும் ரூ.38,720 ஆக உயர்ந்தது. கடந்த 10-ந்தேதி பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்றது. 11-ந்தேதி ரூ.37,920 ஆக குறைந்தது.

    நேற்று முன்தினம் மேலும் குறைந்து ரூ.37,840-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று சற்று அதிகரித்து ரூ.38,080-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.62,30-க்கு விற்கப்படுகிறது.

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை இன்று 80 ரூபாய் உயர்ந்து பவுனுக்கு ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 740-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கிறது.

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63 ஆயிரமாக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 730 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கிறது.

    • அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.

    அவிநாசி:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம், சேவூர் அருகேயுள்ள மங்கரசவளையபாளையம் பகுதியில் நடந்தது.மாநில தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவிநாசி தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையாக, மாட்டுப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய், எருமைப்பால், லிட்டருக்கு 80 ரூபாய் உயர்த்த வேண்டும்.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
    • வெள்ளி இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.64-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் உயர்ந்து வந்தது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே விலை குறைந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி ஆயுதபூஜையன்று 1 பவுன் தங்கம் ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.38,680 ஆக அதிகரித்தது. 6-ந்தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.38,720-க்கு விற்கப்பட்டது. கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளிலும் அதே விலையில் நீடித்தது.

    இந்த வார தொடக்கமான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.280 குறைந்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4775-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4740-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.64-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.64 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலையும் சரிவை சந்தித்து இருக்கிறது.
    • கிராம் ரூ.66-ல் இருந்து ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.64,800 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,840-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,805 ஆக விற்பனை ஆகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38.440-ஆக குறைந்துள்ளது.

    ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ. 35-ம் பவுன் ரூ.280-ம் குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்து இருக்கிறது. கிராம் ரூ.66-ல் இருந்து ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.64,800 ஆகவும் குறைந்து உள்ளது.

    • வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
    • கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் அதிகரித்து உள்ளது.

    நேற்று பவுன் ரூ38,680-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.38,720 ஆக உயர்ந்து உள்ளது. கிராம் ரூ. 4,835-ல் இருந்து ரூ.4.840 ஆக உயர்ந்தது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.5-ம் பவுன் ரூ.40-ம் அதிகரித்து உள்ளது.

    வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.50-க்கும். கிலோ ரூ.66.500-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் ரூ.4,840-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,835-க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38,680 ஆக குறைந்துள்ளது. தங்கம் ஒரே நாளில் கிராம் 5 ரூபாயும். பவுன் 40 ரூபாயும் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.50-க்கும். கிலோ ரூ.66.500-க்கும் விற்பனை ஆகிறது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது.
    • இதை தொடர்ந்து சேலத்தில் மார்க்மகெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை

    சேலம், அக்.6-

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. கோவில்களில் சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம், பூைஜ கள் செய்யப்பட்டது. வீடு கள், நிறுவனங்களில் சாமி படங்களுக்கு மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் கோவில்களில் வழிபட பூக்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் ஆயுத பூைஜ, சரஸ்வதி பூைஜயை முன்னிட்டு பூக்களில் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களில் விைல விபரம் வருமாறு-

    குண்டு மல்லிகை பூ- ரூ.500, முல்லை- ரூ.360, ஜாதி மல்லிகை- ரூ.280, காக்காட்டான்- ரூ.240, கலர் காக்கட்டான் - ரூ.200, சம்மங்களி - ரூ.70, சாதா சம்மங்கி- ரூ.70, அரளி - ரூ.60, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி- ரூ.80, ஐ.செவ்வரளி- ரூ.80, நந்தியாவட்டம் - ரூ.15, சி.நந்திவட்டம் - ரூ.15.

    • வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    வெள்ளக்கோயில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 46, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 42, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா். 

    ×